twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிகினி போட்டோவை போட்டு கிளாமரை கொண்டாட கூறிய நடிகை.. துப்பாத குறையாக திட்டித்தீர்த்த நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: தான் பிகினியில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து தனது கிளாமரை கொண்டாடக் கூறிய நடிகையை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

    Recommended Video

    Meera Mithun Phone Number in Adult Sight | Yashika Boy Friend

    நடிகை மீரா மிதுன் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி செய்திகளில் இடம் பெற்று வருகிறார். குறிப்பாக 2016ஆம் ஆண்டு ஃபெடிமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.

    அப்போது முதலே பிரச்சனையில் சிக்கி வருகிறார். திருமணம் ஆனதை மறைத்து அழகி போட்டியில் பங்கேற்றார், பல பெண்களிடம் அழகி போட்டி நடத்தப்போவதாக கூறி பண மோசடி செய்தார் என அவருக்கு பிரச்சனை ஆரம்பித்தது.

    பட வாய்ப்பு

    பட வாய்ப்பு

    அப்போது முதலே மீரா மிதுனுக்கு நெகட்டிவ் ரீச்சுதான். போதா குறைக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். அங்கேயும் இயக்குநர் சேரன் உட்பட சக போட்டியாளர்களிடம் மோதலில் ஈடுபட்டார். இதனால் மேலும் டேமேஜ்ஜானார் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார்.

    அதிகரிக்கும் கவர்ச்சி

    அதிகரிக்கும் கவர்ச்சி

    ஆனால் அதற்கு மாறாக ஒப்பந்தமான படங்களில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு படவாய்ப்புகள் இல்லாததால் நடிகை மீரா மிதுன், கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுபட வாய்ப்புகளை தேடி வருகிறார். வாய்ப்புக்காக அவர் காட்டும் கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அலறவிடும் மீரா

    அலறவிடும் மீரா

    நிர்வாணம், அரை நிர்வாணம், பிகினி மற்றும் உள்ளாடைகளுடனும் உள்ளாடைகள் அணியாமலும் கண்கள் கூசும் போட்டோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களை அலற விடுகிறார். அவரது போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தாலும் அடங்குவதாய் இல்லை மீரா மிதுன்.

    விஜய்க்கூட காப்பிதான்

    விஜய்க்கூட காப்பிதான்

    அதோடு தன்னை பார்த்துதான் பாலிவுட் நடிகைகள் காப்பியடித்த போட்டோ ஷுட் நடத்துவதாக குற்றம்சாட்டி வருகிறார். அண்மையில் நடிகர் விஜயின் மாஸ்டர் பட போஸ்டர் கூட தன்னை பார்த்து அடிக்கப்பட்ட காப்பிதான் என கூறி பரபரப்பை கிளப்பினார்.

    கவர்ச்சியை அனுபவியுங்கள்

    தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மீரா மிதுன் இன்று நீல நிற பிகினியில் எடுக்கப்பட்ட கிளாமர் போட்டோவை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதற்கு வீட்டில் இருந்து என்னுடைய கவர்ச்சியை அனுபவியுங்கள் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் மீரா மிதுன்.

    இந்தியாவில் கொரோனா

    இந்தியாவில் கொரோனா

    அவரது இந்த போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்து கடுப்பாகி போயுள்ளனர் நெட்டிசன்கள். நாடே கொரோனா வைரஸின் தாக்குதலால் பெரும் பீதியில் உறைந்துள்ளது. உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட கொரோனா வைரஸ், இந்தியாவில் 400க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.

    கொண்டாட்டமா?

    இந்த நேரத்திலும் கிலுகிலுப்பான கவர்ச்சி படங்களை போட்டு கொண்டாட சொல்கிறீர்களே என விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள். மீராவின் போட்டோவையும் அவருடைய கேப்ஷனையும் பார்த்த இந்த நெட்டிசன் இதெல்லாம் ஒரு பிழைப்பா என கேட்டுள்ளார். இதுல உங்களுக்கு இப்படி ஒரு கொண்டாட்டமா...? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    மார்ஃபிங் போட்டோக்கள்

    உங்க போட்டோவை பாக்குறதுக்கு வெளில போய் கொரோனாவாலயே கடிபட்டு சாவலாம்.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். அவரது இந்த போட்டோ மார்ஃபிங் செய்யப்பட்டது போன்று உள்ளது. அண்மையில் அவரது போட்டோக்கள் நிர்வாண போட்டோக்களாக மாற்றப்பட்டு ஆபாச வலைதளங்களில் விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Meera mithun shares her bikini photo and asking netizens to enjoy her glamour. Netizens slams her for the photo and the caption.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X