உங்கள் வாழ்க்கை என் தயவில் கிடைத்தது.. அபிராமியை வெளுத்த மீரா மிதுன்..வெளியே வந்தும் ஓயாத சண்டை!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுனுக்கும் அபிராமிக்கும் இடையேயான சண்டை நாளுக்கு நாள் முற்றி வருகிறது.
மீரா மிதுன் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான புகார்கள் அவர் மீது குவிந்து கொண்டிருந்த நிலையில் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியானார் மீரா மிதுன். அப்போதே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த சாக்ஷி, அபிராமி ஆகியோரின் முகம் மாறிவிட்டது.

கேரியருக்கே வேட்டு
இதனை தொடர்ந்து மீரா மிதுனை, ஃபிராடு, ஏமாற்றுக்காரி என்றெல்லாம் வசைப்பாடினார்கள் அபிராமி மற்றும் சாக்ஷி ஆகியோர். இதனால் பிக்பாஸ் வீட்டில் ஒதுக்கப்பட்டார் மீரா மிதுன். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் மீராவின் கேரியருக்கே வேட்டு வைக்கும்படியாக இருந்தது தனிக்கதை.
பைத்தியமாக்க முயற்சி
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் மீரா மிதுன், அபிராமி, சாக்ஷி ஆகியோர் இடையேயான சண்டை ஓய்ந்த பாடில்லை. அபிராமி, சாக்ஷி ஆகியோர் தொழிலதிபர் ஜோ மைக்கெல்லுடன் சேர்ந்துகொண்டு தன்னுடைய மொபைல் நம்பரை தங்களின் தனிப்பட்ட குரூப்பில் பகிர்ந்துள்ளதாகவும், இதனால் தினமும் பலர் தனக்கு போன் செய்து மனரீதியாக துன்புறுத்துவதாகவும் தன்னை பைத்தியமாக்க முயற்சிப்பதாகவும் கூறினார் மீரா மிதுன்.

அபியை சீண்டிய மீரா
இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும், அபிராமி, சாக்ஷி ஆகியோரிடையே பிரச்சனை இருப்பது தெளிவானது. இந்நிலையில் அபிராமியை சீண்டி டிவிட்டியிருக்கிறார் மீரா.
உங்களை எரித்துவிடும்
இதுதொடர்பான அவரது டிவிட்டில், அபிராமியின் மலிவான தந்திரம். ஒரு வாழ்க்கையை பெறுங்கள் ஜோ கேங்.. என்னிடம் பிரச்சனை வேண்டாம் என எச்சரிக்கிறேன். அபிராமி, நீ வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை என்னுடைய தயவில் கிடைத்தது. என்னை ட்ரோல் செய்வதற்காக உங்களின் பணத்தை இழக்காதீர்கள். என்னுடைய ரசிகர்கள் பட்டாளம் குறித்து உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். வெறுப்பு உங்களை எரித்துவிடும். இவ்வாறு மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications