குடும்ப ஆதிக்கம்.. கமலையும் வம்புக்கிழுத்த மீரா மிதுன்.. அக்ஷரா ஹாசனையும் சரமாரி விளாசல்!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் கடைசியாக கமல்ஹாசனையும் வம்புக்கு இழுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மீரா மிதுன், சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது தொடர்பாக குறும்படம் போட்ட கமல்ஹாசன் மீரா மிதுன் கூறியது பொய் என நிரூபித்தார்.
இந்த சம்பவத்தால் மக்களின் கோபத்திற்கு ஆளான மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

நீக்கம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான, நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்திருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே கூறினார் மீரா மிதுன். ஆனால் படத்தில் அவர் நடித்திருந்த காட்சிகள் எதுவும் இல்லை.

விளாசல்
அவர் நடித்திருந்த காட்சிகள் அனைத்தையும் படக்குழு நீக்கிவிட்டது. இதனை சற்றும் எதிர்பாராத மீரா மிதுன் இது தொடர்பாக படக்குழுவை டிவிட்டரில் கடுமையாக விளாசினார்.

பாலிவுட்
இந்நிலையில் நடிகர் அருண் விஜயுடன் நடிக்க இருந்த அக்னி சிறகுகள் படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார் மீரா மிதுன். மீரா மிதுனுக்கு பதிலாக அந்தப் படத்தில் அக்ஷராஹாசன் நடிக்கவுள்ளதாக கூறிய அவர், தான் பாலிவுட்டுக்கு செல்வதாக கூறினார்.

கமலை இழுத்த மீரா
இதற்காக மும்பை சென்றுள்ள மீரா மிதுன் பாலிவுட்டில் டெஸ்ட் ஷுட் நடப்பதாக கூறி அதற்கான போட்டோக்களையும் தமது சமுக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வந்தார். இந்நிலையில் அக்னிசிறகுகள் படத்தில் அக்ஷராஹாசன் நடிப்பது தொடர்பான செய்தியை ஷேர் செய்துள்ள மீரா மிதுன், கமல்ஹாசனையும் அக்ஷரா ஹாசனையும் விளாசியிருக்கிறார்.

குடும்ப ஆதிக்கம்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கோலிவுட்டில் குடும்ப ஆதிக்கம் உச்சத்தில் உள்ளது. கமல்ஹாசனின் செல்வாக்கால் என்னை இந்தப் படத்தில் நீக்கிவிட்டு அவரது மகளை இந்தப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
அம்பலம்
இதற்கான குற்ற உணர்ச்சி அவளுக்கு இல்லையா? என்று கேட்டுள்ள மீரா மிதுன் தயாரிப்பாளரான அம்மா கிரியேஷன்ஸ் மற்றும் இயக்குநர் நவீன் ஆகியோரை உங்களின் இரட்டை நிலை அம்பலமாகிவிட்டது என்றும் சாடியிருகிறார்.

கமல் குடும்பத்தார்
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன், அபிராமி, சாக்ஷி, தர்ஷன், முகென், நம்ம வீட்டுப்பிள்ளை படக்குழு, தொழிலதிபர் ஜோ மைக்கெல் ஆகியோரை மட்டுமே சாடி வந்த மீரா மிதுன் தற்போது நடிகர் கமல்ஹாசனையும் அவரது குடும்பத்தாரையும் சீண்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











