twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரொம்ப டார்ச்சர் பண்றாங்க.. சென்னை போலீஸ டிஸ்மிஸ் பண்ணணும்.. பிரதமரிடம் புகார் கூறிய மீரா மிதுன்!

    |

    சென்னை: நடிகை மீரா மிதுன் சென்னை போலீஸ் குறித்து பிரதமர் மோடியிடம் டிவிட்டர் வாயிலாக புகார் கூறியிருக்கிறார்.

    நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் சேரன் தன்னை சேரன் தவறாக தொட்டதாக கூறிய புகாரால் அவர் பெரும் பிரபலமானார்.

    இதனை தொடர்ந்து தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் மீரா மிதுன்.தொழிலதிபர் ஜோ மைக்கெல்லை ஆளை வச்சு தூக்கிடு என அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    தேவையில்லா அழைப்பு

    தேவையில்லா அழைப்பு

    அதற்கு முன்னதாகவே அவர், மீது பல்வேறு மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்கள் தனது போன் நம்பரை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் இதனால் தேவையில்லாத போன் கால்கள் வருவதாக கூறினார்.

    சட்டம் ஒழுங்கு சரியில்லை

    சட்டம் ஒழுங்கு சரியில்லை

    இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். மேலும் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் படித்தவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

    ரூடாக நடந்த இன்ஸ்பெக்டர்

    ரூடாக நடந்த இன்ஸ்பெக்டர்

    இந்நிலையில் நேற்று எக்மோர் காவல் நிலையத்தில் இருந்து பெண் சப் இன்ஸ்பெக்டர் கால் செய்து தன்னிடம் ரூடாக நடந்து கொண்டதாக கூறினார். இதுதொடர்பான ஆடியோக்களை சில ஊடகங்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

    மோடியிடம் புகார்

    மோடியிடம் புகார்

    இதனை தொடர்ந்து சென்னை போலீஸ் தனக்கு அநீதி இழைப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும் தனக்கு அநீதி இழைக்கும் போலீசாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கும் புகார் தெரிவித்திருக்கிறார்.

    டிஸ்மிஸ் செய்யனும்

    டிஸ்மிஸ் செய்யனும்

    இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, எனக்கு அநீதி இழைத்த சென்னை போலீசார் அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கவில்லை. ஆனால் சீர்குலைவை பாதுகாக்கிறார்கள்.

    மோடியை டேக் செய்த மீரா

    போலீசார் சட்டத்தை அமல்படுத்தும் போது அந்த சட்டத்தை பின்பற்றவும் வேண்டும். ஒராண்டாக எனக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இன்னும் எனக்கு டார்ச்சர் தொடருகிறது என தெரிவித்துள்ள மீரா மிதுன், அந்த ட்விட்டில் பிரதமர் நரேந்திர மோடியையும் டேக் செய்துள்ளார்.

    English summary
    Meera Mithun says Chennai police should be dismissed and she accused that Chennai police preserve disorder. And also she said police should follow the law while enforcing the law. One year of injustice and still i have tortures. She also taged her tweet to PM Modi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X