twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரதமர் நிச்சயம் என் பிரச்சனையை கவனிப்பார்.. அடங்க மறுக்கும் மீரா.. இம்முறை மத்திய அமைச்சருக்கும்!

    |

    சென்னை: சென்னை போலீஸை கூண்டோடு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் புகார் கூறிய நடிகை மீரா மிதுன் தற்போது மத்திய அமைச்சரிடமும் புகார் கூறியிருக்கிறார்.

    நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் தன்னை தவறாக தொட்டதாக குற்றம்சாட்டினார். ஆனால் அவரது குற்றச்சாட்டை குறும்படம் போட்டு பொய் என நிரூபித்தார் கமல்.

    Meera mithun complaints to Union Minister Smiriti Irani

    இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், கிடைக்கும கேப்பில் எல்லாம் சேரன், கமல், பிக்பாஸ் போட்டியாளர்கள் என அனைவர் மீதும் குற்றம்சாட்டி வருகிறார்.

    இந்நிலையில் தனக்கு வரும் போன் கால்கள் குறித்து புகார் அளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய மீரா மிதுன், தனக்கு அநீதி இழைத்த சென்னை போலீசாரை கூண்டோடு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பிரதமர் மோடியை டேக் செய்து டிவிட்டியிருந்தார்.

    இந்த தகவல் ஊடகங்களில் செய்தியாக வெளியானது. இதனை தொடர்ந்து மீண்டும் இவ்விவகாரம் குறித்து டிவிட்டியுள்ள மீரா மிதுன், பிரதமர் என் பிரச்சனையை கவனிப்பார் என நம்புகிறேன் என டிவிட்டியிருக்கிறார். மேலும் அந்த டிவிட்டை பிரதமர் அலுவலகமான பிஎம்ஓ இந்தியா, நரேந்திர மோடி, மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உள்ளிட்டோரையும் டேக் செய்திருக்கிறார் மீரா மிதுன்.

    ஏற்கனவே மீரா மிதுனின் டிவிட்ஸையும் வீடியோக்களையும் பார்த்து மரண கலாய் கலாய்த்து வரும் நெட்டிசன்ஸ், இந்த டிவிட்டை பார்த்து, சீக்கிரம் ஒரு நல்ல மருத்துவரை போயி பாருங்கள் என டிவிட்டி வருகின்றனர்.

    மேலும், நாட்டின் பிரதமருக்கு வேற வேலை இல்லை. நீங்கள் சிகரெட் அடிக்கிறதுக்கும், தண்ணி அடிக்கிறதுக்கும், பண்ணுற தகராறுக்கும் பஞ்சாயத்து செய்வதுதான் அவரின் வேலையா என கேட்டு கடுப்படித்து வருகின்றனர்.

    English summary
    Meera complaints to Union Minister Smiriti Irani about her issues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X