எப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
நடிகை மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தமிழ் சினிமா தனது திறமைக்கு ஏற்ற இடம் அல்ல, இங்கு குடும்ப ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று கூறிய மீரா பாலிவுட்டில் நடிக்க மும்பை சென்றுள்ளார்.
மும்பையில் இருந்தபடியே தமிழ் சினிமாவின் பிரமுகர்களையும், தமிழ் சினிமாவையும் சாடி வந்தார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

பெயர் டேமேஜ்
இதனால் நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்றப் பிறகு மீராவின் பெயர் பெரும் டேமேஜாகிவிட்டது.

திருமணம்
மீரா என்ன பேசினாலும் டிவிட்டினாலும் பெரும் சர்ச்சையாகிவிடுகிறது. இந்நிலையில் டேமேஜான தனது பெயரை மீட்டெடுக்க திருமணம்தான் ஒரே வழி என முடிவு செய்துள்ள மீரா மிதுன்.

ரசிகர்கள் கேள்வி
இந்த தகவல் நேற்று பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளியானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனிடம் இது உண்மையா? திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர்.
தீவிர மண வாழ்க்கை
அதற்கு பதிலளித்த மீரா மிதுன், ஆமாம், நான் திருமணம் செய்துகொண்டால் தீவிர மணவாழ்க்கையில் இருக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
நன்மைதான் செய்வார்
உங்களுக்கு நல் வாழ்த்துக்கள். உங்களை ஒருபோதும் செல்ல விடாத இதயத்தை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.. என தெரிவித்த ஒரு ரசிகருக்கு நன்றி தெரிவித்த மீரா மிதுன், கடவுள் எப்போதும் எனக்கு நன்மைதான் செய்வார் என தெரிவித்துள்ளார்.

எப்போது திருமணம்
மீரா மிதுனின் டிவிட்டுகளை பார்க்கும் போது அவர் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து எப்போது திருமணம் என மீரா விரைவில் அறிவிப்பார் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது திருமணம்
மீரா மிதுன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். தற்போது அவருக்கு நடக்க இருப்பது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











