அது ரொம்ப கஷ்டம்: பாத்திமா பாபுவிடம் கண்ணீர் விட்ட மீரா, தண்ணி காட்டிய அபி
Recommended Video
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டிற்கு லேட்டாக வந்துள்ள மீரா மிதுன் அழுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டிற்கு யாரோ புதுசா வராங்க என்று பில்ட் அப் கொடுத்தார்கள். சாந்தினி தமிழரசன் அல்லது பவர் ஸ்டார் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் மீரா மிதுன் வந்துள்ளார்.
அவர் அண்மையில் சர்ச்சையில் சிக்கியதால் தான் அவரை பிக் பாஸ் 3 வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் புதிய ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
மீரா மிதுன்
எனக்கு வாழ்க்கையில் பிடிக்காத விஷயம் மற்றவர்கள் என்னை பார்த்து பொறாமைப்படுவது தான் என்று பாத்திமா பாபுவிடம் கூறி மீரா மிதுன் அழுகிறார். எனக்கு ஃபீல் பண்ண முடியும். அவங்க ஏன் பேசுறாங்க, எதுக்கு பேசுறாங்க, என்ன பண்ண டிரை பண்றாங்க என்று மீரா அழ அதை பார்த்த அபிராமி ஓடிப் போய் ஒரு கிளாஸில் தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பது போன்று ப்ரொமோ வீடியோவில் காட்டியுள்ளனர்.

கண்ணீர்
ரேஷ்மா தன் வாழ்வில் நடந்த சோகம் பற்றி கூறி கண்ணீர்விட்டார். அதை பார்த்து பிக் பாஸ் பிரபலங்கள் கண் கலங்க, அவர்களை பார்த்து ரசிகர்கள் ஃபீல் பண்ணினார்கள். அப்போது அழாத ஒரே ஆள் மீரா மிதுன் தான். இந்நிலையில் அவர் ப்ரொமோ வீடியோவில் சீன் போடுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லவர்
ப்ரொமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்களோ இப்படி எல்லாம் அழுது சீன் போட்டால் மட்டும் நாங்கள் மீரா மிதுனை நல்லவர் என்று நம்ப மாட்டோம். அவர் யார் என்று எங்களுக்கும் தெரியும், பிக் பாஸுக்கும் தெரியும். கண்ணீர் விட்டு அதை மாற்றவிட முடியாது என்கிறார்கள். மேலும் மீராவுக்கு அபிராமி தண்ணி காட்டுவதாகவும் விமர்சிக்கிறார்கள்.
நெட்டிசன்கள்
மீரா மிதுன் மீது நெட்டிசன்கள் செம கடுப்பில் உள்ளனர். அவர் மீதான வழக்கு விபரங்களை தேடிக் கண்டுபிடித்து அது குறித்து ட்வீட் செய்கிறார்கள். மேலும் அவர் பல மாடல் அழகிகளை ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











