இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு
ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட்டிலேயே செட்டிலாகி விடுவது என முடிவெடுத்து விட்டாராம் நடிகை மீரா மிதுன்.
Recommended Video
சென்னை: இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்கப் போவதில்லை, ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட்டிலேயே செட்டிலாகப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார் சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகை மீரா மிதுன்.
பெரும்பாலும் பிக் பாஸ் போய் வந்த பிறகு தான் சிலர் பேரைக் கெடுத்துக் கொள்வார்கள். ஆனால் நடிகை மீரா மிதுனோ பிக் பாஸ் போவதற்கு முன்னதாகவே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். சரி, பிக் பாஸ் வீட்டிலாவது தன் மீதான அவப்பெயரை மாற்றினாரா என்றால், அதுவும் இல்லை. அந்நிகழ்ச்சி மூலம் மேலும் பெயரைக் கெடுத்துக் கொண்டார்.
பிக் பாஸ் மூலம் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்கள் கூட, இப்போது வெளியில் வந்து நார்மலாகி தங்கள் சொந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் மீராவோ தொடர்ந்து மற்றவர்கள் மீது புகார் கூறி டிவீட்டுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார்.

அக்னிச் சிறகுகள்
தமிழில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாக முதலில் புகார் கூறினார். பின்னர் அக்னிச் சிறகுகள் படத்திலிருந்து தன்னை தூக்கி விட்டதாக இயக்குநர் நவீனுடன் மோதினார். இதற்கிடையே பிக் பாஸ் டைட்டில் வென்ற முகென் உட்பட பல போட்டியாளர்கள் மீது தொடர்ந்து புகார் பத்திரம் வாசித்து வருகிறார்.

இந்தி படம்
தற்போது பட வேலைக்காக மும்பை சென்றிருப்பதாக கூறி வரும் மீரா, அங்கிருந்தபடி சேரனை விமர்சித்து நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதோடு, அங்கு வாழும் தமிழ் மக்களிடமும் அவர் உரையாடும் வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதில் இந்திப் பட வேலைக்காக மும்பை வந்திருப்பதாக மீரா கூறுகிறார்.

மன அமைதி தேவை
மேலும், ‘தமிழ் சினிமாவில் என்னை யாரும் மதிப்பதில்லை. இரண்டு வருடங்களாக நான் போராடிவிட்டேன். போதும் போதும் என்றாகிவிட்டது. எனக்கு இப்போது மன அமைதி தேவை. அது தான் முக்கியம். இப்போது நான் மும்பையில் இருக்கிறேன். படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன்,

சகலகலாவல்லி
இனி நான் தமிழ் சினிமாவில் நடிக்கவே மாட்டேன். ஸ்ரீதேவி, வித்யா பாலன், பிரியங்கா சோப்ரோ போல் பாலிவுட்டில் செட்டிலாக போகிறேன். எந்த ரோல் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகை நான். எனக்கு நன்றாக நடிக்க தெரியும், நடனமாட தெரியும், தமிழில் பேச தெரியும். அப்படி இருந்து எனது வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. பிறகு நான் ஏன் தமிழ்நாட்டில் உட்கார்ந்துகொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டும்.

தற்கொலை
ஹைதராபாத், பெங்களூரு மற்றும் மும்பை தமிழர்களுக்கு கூட என்னை நன்றாக அடையாளம் தெரிகிறது. இவர்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். ஒருவர் கூட என்னை வெறுக்கவில்லை. ஆன்லைனில் தான் எனக்கு ஹேட்டர்ஸ் அதிகம். என்னை தற்கொலை செய்துகொள்ள அவர்கள் தூண்டுகிறார்கள். ஆனால் நான் தைரியமாக எதிர்த்து போராடுவேன்' என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











