twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "உங்கள சும்மா விடமாட்டேன்"- கொந்தளிக்கும் கோபத்தோடு மீரா மிதுன்

    |

    சென்னை : இன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக இருக்கும் ஒரு பிரபலம் மீரா மிதுன். எங்க பார்த்தாலும் மீரா மீரா மீரா. கவர்ச்சி போட்டோ ஷூட் ஒரு பக்கம், சமூக அக்கறையா வீடியோ ஒரு பக்கம் என்று ராசிகர்களை தான் பக்கம் விதவிதமா என்கேஜ் செய்து வருகிறார்.

    இன்று புதுசா பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் சும்மா ரவுண்டு கட்டி அனைவரையும் விளாசு விளாசுகிறார். இந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தின் முக்கிய காரணம் விஜய் டிவி மீதும் தமிழ் நாடு காவல் துறையின் மீதும் உள்ள கடுங்கோபத்தை தீயாய் வெளிப்படுத்தினர்.

    Meera mithun fires TN police and Vijay television

    கடந்த ஒரு ஆண்டு காலமாக அவர் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். பல புகார்களை காவல் துறையிடம் அளித்த பிறகும் எந்த ஒரு நியாயமும் கிடைக்கவில்லை. இவர் அளித்த புகாரின் பேரில் பிர் கூட பதிவு செய்யப்படவில்லை என்பது தான் இந்த கோபத்திற்கு காரணம்.

    அவசரப்பட்டு இப்டி பண்ணிடீங்களே.. இனி உங்கள யார் ஏத்துப்பா.. நடிகையை ஓரங்கட்டும் கோலிவுட்அவசரப்பட்டு இப்டி பண்ணிடீங்களே.. இனி உங்கள யார் ஏத்துப்பா.. நடிகையை ஓரங்கட்டும் கோலிவுட்

    மீரா மிதுன் மீது இரண்டு பொய் வழக்குகள் போடப்பட்டு அதில் இருந்து வெளிவந்துள்ளார் மீரா மிதுன். இருப்பினும் மேலும் மேலும் பல பொய் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு காரணம் என்ன என்பது எனக்கு புரியவில்லை என்றார் மீரா.

    மேலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக எனக்கு எந்த ஒரு நியாயமும் இந்த காவல் துறையினரிடம் இருந்து கிடைக்கவில்லை. என்னுடைய இந்த சிறிய பிரச்சனையையே தமிழக காவல் துறையால் தீர்க்கப்படமுடியவில்லை என்கிற போது இவர்கள் எப்படி நம் நாட்டில் நடைபெறும் பல பெரிய பிரச்சனைகளை எப்படி சரிசெய்வார்கள் என்பது எனக்கு புரியவில்லை.

    அதனால் நான் என்னுடைய நியாயத்திற்காக இவர்களை விட அடுத்த கட்டத்தில் இருக்கும் உயர்ந்த துறையினரிடம் தமிழ் நாடு காவல் துறையினர் மீதும் அவர்களது மெத்தனமாக போக்கின் மீதும் புகைப்படம் அளிக்க உள்ளேன். அங்கு எனக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும். அது வேறு மாநிலமாக இருந்தாலும் சரி எனக்கு நியாயம் கிடைக்கும் வரையில் போராடுவேன் என்றார் மீரா.

    அடுத்து அவரது கடுமையான கோபத்திற்கு காரணம் விஜய் டிவி. விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் மீரா மிதுன். காண்ட்ராக்ட் முடிவடைந்த 15 நாட்களில் ஒப்பந்தத்தின் படி பணம் செட்டில்மென்ட் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் 40 நாட்கள் கடந்த பின்னரும் இதுவரையில் எந்த ஒரு தகவலோ அல்லது பதிலோ அது குறித்து எனக்கு தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து தொடர்பு கொண்டாலும் பதில் அளிப்பதில்லை என்றார்.

    இதுவரையில் முன்பணம் என்று ஒரு பத்து பைசா கூட வாங்காமல் அவர்களின் காண்ட்ராக்ட் படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். சாக போட்டியாளர்கள் அனைவர்க்கும் செட்டில்மென்ட் வந்து விட்டதா என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் எனக்கு ஒரு தகவல் கூட கொடுக்கப்படவில்லை என்பது என்னை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைக்க தூண்டுகிறது.

    எண்டமோல் நிறுவனம் தான் எங்களை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு காண்ட்ராக்ட் மூலம் எடுத்தது. அவர்கள் எப்படி இது போல பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. நிகழ்ச்சியில் உள்ள வரை என்னுடைய கன்டென்ட் அவர்களுக்கு தேவை பட்டது. முடிவடைந்த பின்னர் மெத்தனாக இருப்பது எந்த வகையில் நியாயம்.

    இது போன்ற நிலவரம் நீடித்தால் பிறகு எந்தமொல நிறுவனம் மீதும் விஜய் டிவி மீதும் புகார் அளிக்கலாம். ஆனால் இங்கு காவல் துறையிடம் அல்லது நீதி மன்றத்தில் எந்த நியாயமும் கிடைக்க போவதில்லை.

    சேரன் சார் விவகாரத்தில் என்னை ஒரு பெண்ணாக பார்க்காமல் அதை ஒரு பெரிய விஷயமாகி அசிங்கப்படுத்தினர். எனக்கு ஆதரவாக பல பத்திரிகைகள் சப்போர்ட் செய்துள்ளனர். அதை ஒரு சாட்சியாக வைத்து கொண்டு மனித உரிமை மீறல் என்றால் வழக்கில் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று புகார் அளித்தால் தான் அவர்கள் உடன்படுவார்கள் போல் உள்ளது என்றார்.

    அவகாசம் கேட்டு இருந்தால் கூட ஆறுதலாக இருந்திருக்கும். ஆனால் அவர்களின் அலட்சியம் தான் என்னை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. இதற்கு ஒரு முடிவு வரவில்லை என்றால் நான் எந்த கட்டத்திற்கு இதை எடுத்து செல்வேன் என்று நீங்கள் பொருத்திருந்து பாருங்கள் என்றார்.

    நான் ஒரு மோசமானவள் என்று நிகழ்ச்சி மூலம் சித்தரிக்கபட்டு இருக்கலாம் ஆனால் உண்மையில் நான் எப்படி பட்டவள் என்பது தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும் என்றார் இந்த வீர மங்கை.

    English summary
    Meera mithun states that all her complaints are not considered but just ignored by TN Police Deparment. She also fires vijay television for non-settlement of contract amount even after so many days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X