சிம்ரனுடன் சேர்ந்து போட்டோ போட்ட மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் சிம்ரனுடன் சேர்ந்து எடுத்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனையில் சிக்குவதும் நடிகை மீரா மிதுனின் வாடிக்கை. தமிழ் சினிமாவே வேண்டாம் என டாடா காட்டிவிட்டு மும்பை சென்றார் மீரா மிதுன்.
ஆனால் போன வேகத்தில் மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார் மீரா மிதுன். வந்த வேகத்தில் தமிழக போலீசார் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

வழக்குப்பதிவு
சென்னை வந்த கையோடு மீரா மிதுன் மீது ஹோட்டல் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்தது உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதனை மறுத்திருக்கிறார் மீரா மிதுன்.

எவ்ளோ க்யூட்
இந்நிலையில் மீரா மிதுன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நடிகை சிம்ரனுடன் சேர்ந்து எடுத்துள்ள போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். மேலும், ஓ மை காட் எவ்ளோ க்யூட்டா இருக்காங்க சிம்ரன். மற்றவர்களுக்கு வேகமாக வயதாகும் போது சிம்ரனுக்கு வயதாவதே தெரியவில்லை.
வெள்ளித்திரையின் ராணி
20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளித்திரையை ஆட்சி செய்து வருகிறார் சிம்ரன். அவரை விட நான் வேறு யாரைப் பார்க்க வேண்டும், எனது உத்வேகத்தின் ஆதாரம் வெள்ளித்திரையின் ஒரே ராணி. அவர் எப்போதும் "தி ஹீரோயின்" என சிம்ரனை பாராட்டியிருக்கிறார் மீரா மிதுன்.
மீராவை விட இளமை
மீரா மிதுனின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள், மீராவை விட சிம்ரன் இளமையாக இருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.
ஒரே ஃபிட்னஸ்
மேலும் சிலர் இரண்டு பேரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறீர்கள் ஒரே ஃபிட்னஸ், ஒரே க்யூட்னஸ் என தெரிவித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











