மீரா மிதுன் மேல அபிராமி, சாக்ஷிக்கு இவ்ளோ கோபம் வர காரணம் இதுதானா! யார் இந்த மீரா மிதுன்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் 16வது போட்டியாளராக நுழைந்துள்ள மீரா மிதுன் மீது அபிராமிக்கும் சாக்ஷிக்கும் இருக்கும் கோபத்திற்கான காரணம் தெரிந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் 16வது போட்டியாளராக நேற்று என்ட்ரியானவர் நடிகை மீரா மிதுன். தமிழ்ச்செல்வி என்கிற மீரா மிதுன் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தார்.அது மட்டுமின்றி கடந்த 2016ஆம் ஆண்டு ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.

பெண்களிடம் மோசடி
இந்தப் பட்டத்தை வைத்துக்கொண்டே அழகிப்போட்டி நடத்துவதாகக்கூறி பலப் பெண்களிடம் பணம் மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. மேலும் வயது குறித்து தவறான தகவல் அளித்ததாகவும் அவர் மீது சர்ச்சை எழுந்தது.

பயன்படுத்த தடை
இதைத்தொடர்ந்து மீரா மிதுனுக்கு வழங்கிய மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை திரும்பப்பெற்றது ஃபெமினாஸ். மேலும் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை இனி அவர் பயன்படுத்தக்கூடாது என்றும் ஃபெமினாஸ் தெரிவித்திருந்தது.

சனம் ஷெட்டி அழகியானார்
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து திரும்பப்பெறப்பட்ட பட்டம் அப்போதைய போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டிக்கு வழங்கப்பட்டது. இதனை தனது சமூக வலைதளப்பக்கத்திலும் தெரிவித்தது ஃபெமினாஸ்.

தனக்கு எதிரான சதி
ஆனால் தனக்கு வழங்கப்பட்ட பட்டம் பறிக்கப்படவில்லை என்றும் தமிழ் பெண்ணின் வளர்ச்சியை தடுக்கும் சதி என கொந்தளித்தார். அண்மையில் மிஸ் தமிழ்நாடு திவா என்ற போட்டியை 11 பெண்களை வைத்து இவர் நடத்தினார்.

இவர்களும் பாதிக்கப்பட்டார்களா?
மோசடி புகாரில் சிக்கியதாலேயே அபிராமிக்கும் சாக்ஷிக்கும் மீராவை கண்டால் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. ஒரு வேளை அவரால் பாதிக்கப்பட்டவர்களில் இவர்களும் இருந்தார்களோ என்னவோ?!


Click it and Unblock the Notifications











