டேமெஜான பேர்.. மன உளைச்சல்.. அதான் ஒரே வழி.. கல்யாணத்துக்கு ரெடியான மீரா மிதுன்! மாப்பிள்ளை அவராம்!

Recommended Video

மீரா மிதுன் அசத்தல் வீடியோ!

சென்னை: நடிகை மீரா மிதுன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக் காலமாக செய்திகளில் அதிகம் அடிப்பட்டு வருபவர் நடிகை மீரா மிதுன். 2016 மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்ற இவர், அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பலரிடம் பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் நிலையங்களில் மோசடி புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை திரும்பப்பெற்றது ஃபெமினாஸ் அமைப்பு.

சேரன் மீது புகார்

சேரன் மீது புகார்

இந்த சர்ச்சைகளில் சிக்கியபோதே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் சக போட்டியாளர்களிடம் தொடர்ந்து சண்டை போட்டு வந்த மீரா, இதன் உச்சபட்சமாக சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டார் என கூறி குண்டை தூக்கிப்போட்டார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ஆனால் மீரா சொல்வது பொய் என உணர்ந்த மக்கள் அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றினர். வெளியே வந்த பிறகும் அடங்காத மீரா, சேரன் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார்.

பாலிவுட்தான்

பாலிவுட்தான்

தமிழ் திரைப்படங்களில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட மீரா கோலிவுட் இன்னும் வளரவேண்டும் என்றும் தனது திறமைக்கு சரியான இடம் பாலிவுட்தான் என்று கூறி மும்பை சென்று விட்டார்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

மும்பையில் இருந்தபடியே நாள்தோறும் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வரும் மீரா மிதுன், தொடர்ந்து தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது பெயர் மொத்தமாக டேமெஜ் ஆனதை உணர்ந்த மீரா மிதுன், மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம்.

கல்யாணத்துக்கு ரெடி

கல்யாணத்துக்கு ரெடி

கெட்டுப்போன பெயரை மீட்டெடுக்கவும், மன உளைச்சலுக்கு மருந்து போடவும் ஒரே வழி திருமணம்தான் என முடிவு செய்துள்ளார் மீரா மிதுன். இதனால் கல்யாணம் செய்துக்கொள்ள தயாராகி விட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நிம்மதி பெருமூச்சு

நிம்மதி பெருமூச்சு

தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொள்ள போகிறாராம் மீரா மிதுன். மீராவின் திருமணம் குறித்த தகவலை அறிந்த நெட்டிசன்கள், இனி கவர்ச்சி போட்டோக்களை போட்டு மீரா சூடாக்க மாட்டார் என நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X