Exclusive : “நீங்க நினைக்கிற மாதிரி மீரா மிதுன் கெட்டப்பொண்ணு கிடையாது”..சர்டிபிகேட் தரும் இயக்குநர்
மீரா மிதுன் கெட்டவர் அல்ல என இயக்குநர் சந்துரு தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் சித்தரிக்கப்படுவது போல் மாடல் மீரா மிதுன் கெட்டவர் அல்ல என போதை ஏறி புத்தி மாறி படத்தின் இயக்குனர் சந்துரு கே.ஆர். கூறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டுக்கு லேட்டா போனாலும் லேட்டஸ்டா பேசப்படுவது மாடல் மீரா மிதுன் தான். மீரா மிதுன் உள்ள நுழைஞ்சதுமே அபிராமி மற்றும் சாக்ஷியோட முகம் அஷ்டக்கோணலாக மாறியது நெட்டிசன்களிடம் விவாத்தையும் உண்டாக்கியது.
மீரா மிதுன் ஒரு மோசடி பேர்வழி, அவர் நல்லவர் இல்ல என்பது போன்ற கருத்துகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் அவர் மீதுள்ள வழக்குகளும் கவனத்தில் கொண்டு வரப்பட்டன. இதனால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படும் சூழல் உருவாகியது.

போதை ஏறி புத்தி மாறி:
இந்நிலையில் மீரா மிதுன் முக்கிய ரோலில் நடித்துள்ள போதை ஏறி புத்தி மாறி படக்குழு சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது நம்மிடம் பேசிய அந்த படத்தின் இயக்குனர் சந்துரு கேஆர், மீரா மிதுனுக்கு 'குட்' என காண்டாக்ட் சர்ட்டிபிக்கேட் கொடுத்தார்.

சினிமா ஆசை:
மீரா பற்றி நம்மகிட்ட அவர் சொன்னது இது தான், "ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துல வேலை செஞ்சுட்டு இருந்தேன். சின்ன வயசுல இருந்தே சினிமா ஆசை மனசுக்குள்ள இருந்துச்சு. திடீர்னு வேலையை விட்டுட்டு சினிமா எடுக்க இறங்கிட்டேன்.

நண்பர்கள்:
என்னோட பள்ளி நண்பர் டாக்டர் தீரஜ் தான் படத்தோட ஹீரோ. அவர் ஒரு சிறந்த இதய நோய் நிபுணர். எங்க பள்ளி நண்பர் சாகர் தான் தயாரிப்பாளர். சூதுகவ்வும் படத்தின் இணை இயக்குனர் கதிர் நடராஜன் தான் திரைக்கதை எழுத உதவினார்.
என்னோட பள்ளி நண்பர் டாக்டர் தீரஜ் தான் படத்தோட ஹீரோ. அவர் ஒரு சிறந்த இதய நோய் நிபுனர். எங்க பள்ளி நண்பர் சாகர் தான் தயாரிப்பாளர். சூதுகவ்வும் படத்தின் இணை இயக்குனர் கதிர் நடராஜன் தான் திரைக்கதை எழுத உதவினார்.

திரைக்கதை:
கிட்டத்தட்ட ஹேங்ஓவர் படம் போல கல்யாணத்துக்கு முன்னாடி நடக்கும் ஒரு பேச்சுலர் பார்ட்டியால் ஹீரோவுக்கு ஏற்படும் சிக்கல் தான் படத்தின் கதை. ஆனால் அடுத்தக்காட்சி என்னவென்று யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அமைச்சிருக்கோம்.

மீரா மிதுன் கேரக்டர்:
பிரதாயினி, துஷாரா, மீரா மிதுன்னு மூன்று பெண்கள் இந்த படத்துல முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. இதுல மீரா மிதுனின் ரோல் படத்தின் திருப்பத்துக்கு உதவும். நான் கேட்ட உடனே நடிக்க ஒத்துக்கிட்டாங்க.

நல்ல கேரக்டர்:
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன பிறகு மீரா மிதுன் பரபரப்பாக பேசப்படுறாங்க. அவங்க பத்தி நிறைய நெகட்டிவான விஷயங்கள் வெளியே பரப்பப்படுது. ஆனால் உண்மையில் அவங்க அப்படி இல்ல. என்னிடம் பழகிய வரை மீரா நல்ல கேரக்டர் தான்", என்கிறார் சந்துரு.


Click it and Unblock the Notifications











