அட.. மீரா மிதுனா இது.. செம அழகா இருக்காங்களே.. அசத்தல் வீடியோ!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் ரீடிவிட் செய்துள்ள அவரது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகை மீரா மிதுன் தற்போது மும்பையில் உள்ளார். அடுத்தடுத்து தமிழ் படங்களில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தான் பாலிவுட்டுக்கு செல்வதாக கூறி மும்பை சென்றிருக்கிறார் மீரா மிதுன்.
பாலிவுட் படங்களில் நடித்து வருவதாக கூறி வரும் மீரா மிதுன், தொடர்ந்து ஷுட்டிங் போட்டோக்கள் என வெளியிட்டு வருகிறார். மேலும் கையில் தம்மும் ஆட்டமும் என வீடியோ வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன்.

மும்பையில்..
இதனால் மீரா மிதுனை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள், தயவு செய்து தமிழ் நாட்டுக்கு திரும்பி வந்து விடாதீர்கள் மும்பையிலேயே இருந்து விடுங்கள் என கூறி வருகின்றனர். அறைகுறை ஆடையில் மும்பை பீச், பப், மோனா ரயில் பயணம் என்று கழித்து வருகிறார் மீரா மிதுன்.

ஸ்ட்ராப்லஸ் உடை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியார்களையும் வீடியோ வாயிலாக திட்டி தீர்த்து வருகின்றார். இந்நிலையில் மீரா மிதுன்
பச்சை நிற ஸ்ட்ராப்லஸ் உடையில் நடந்து செல்லும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அதகளம்
வழக்கமாக ஃபிரி ஹேரில் வீடியோ வெளியிடும் மீரா, இந்த வீடியோவில் புது ஹேர் ஸ்டைலை ட்ரை செய்திருக்கிறார். தலையில் பூ, கூலிங் கிளாஸ், பெரிய இயர் ரிங்ஸ் என அதகளப்படுத்தியிருக்கிறார் மீரா மிதுன்.
ஃபுல் மேக்கப்
இந்த வீடியோவை திடீரென பார்க்கும் போது மீரா மிதுனா என்ற சந்தேகம் வருகிறது. அந்தளவுக்கு ஃபுல் மேக்கப்பில் அழகாக தோன்றியிருக்கிறார் மீரா மிதுன்.
உயிரை வாங்குறீங்க
ஆனாலும் அவரை திட்டித்தான் வருகின்றனர் நெட்டிசன்கள். இதையெல்லாம் டிவிட் செய்து ஏன்யா எங்கள் உயிரை வாங்குகிறீர்கள் என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











