மீரா மிதுனா இது.. சேலையை தூக்கி சொருகி.. சேற்றில் இறங்கி.. நாற்று நட்டு.. அடடே!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுன் சேலையை தூக்கி சொருகி நாற்று நட்ட வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
நடிகை மீரா மிதுன், சர்ச்சைகளுக்கு சற்றும் பஞ்சமில்லாதவர். அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3யில் அவர் பங்கேற்ற பிறகு பெருமளவு பிரபலமாகிவிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் இயக்குநர் சேரனை குற்றம் சாட்டியவர், அங்கிருந்து வெளியேறிய பிறகு மொத்த ஆண் போட்டியாளர்கள் மீதும் குற்றச்சாட்டை அள்ளி வீசினார். நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயேன், இயக்குநர்கள் பாண்டிராஜ், நவீன் என பலரையும் கடுமையாக விமர்சித்தார்.
அரை நிர்வாண போட்டோக்கள்
தொடர்ந்து தமிழ் சினிமாவே வேண்டாம் என பாலிவுட்டுக்கு சென்றார். அங்கு போன பிறகு கையில் தம், பப்பில் டான்ஸ், அரைகுறை உடை என அதிரடி காண்பித்து வந்தார். அவரது அரை நிர்வாண போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நொந்தே போயிவிட்டனர்.
நெட்டிசன்கள் கடுப்பு
தொடர்ந்து சிறுவன் சுஜித் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக சாடினார். இதனால் கொதித்த நெட்டிசன்கள் முதலில் ஒழுங்காக ஆடை அணியுங்கள் பின்னர் அரசுக்கு அட்வைஸ் செய்யலாம் என திட்டி தீர்த்தனர்.
பக்கா ஹோம்லி
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பழக்கமான நடிகர் சரவணன் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டார் மீராமிதுன். சேலம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சேலை, பூ, பொட்டு என பக்கா ஹோம்லியாக இருந்தார்.

விவசாய பணி
அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர், தற்போது அதே காஸ்ட்யூமில் ஒரு அசத்தல் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதாவது, சரவணன் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற உடையில் இருந்தபடியே அப்பகுதியில் வயலில் நாற்று பறித்துக்கொண்டிருந்த பெண்களிடம் தனக்கும் நாற்று பறிக்க மற்றும் நாற்று நட கற்றுத்தருமாறு கூறினார்.

நாற்று நட்ட மீரா
இதனைக் கேட்ட அந்த பெண்கள், அவருக்கு நாற்று பறிக்கவும் நடவும் கற்றுக்கொடுத்தனர். பின்னர் சேலையை தூக்கி சொருகியபடி மீரா மிதுனும் நாற்று பறித்தக் கையோடு நாற்று நட்டும் அவர்களுடன் வீடியோ எடுத்துக்கொண்டார். அந்த வீடியோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











