ஃபேக் நியூஸ்.. என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.. மீடியாக்களுக்கு மீரா மிதுன் வார்னிங்!
Recommended Video
சென்னை: தன்மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எல்லாம் பொய் என நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
நடிகை மீரா மிதுன் கடந்த சனிக்கிழமை சென்னை எக்மோரில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் டிவி ஒரு ரூபாய் கூட இதுவரை தனக்க பேமென்ட் தரவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற அவர் தனக்கு இங்கு பாதுகாப்பு இல்லாததால்தான் மும்பையில் குடியேறியதாகவும் தெரிவித்தார். மும்பைதான் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

பணம் கொடுத்தால்
மேலும் சென்னை போலீஸார் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிபுரிவதாகவும் தெரிவித்தார். 10000 ரூபாய் கொடுத்தால் யார் மீது வேண்டுமானாலும் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்றும் சாடினார்.

திட்டிய மீரா மிதுன்
இதனை கேட்ட ஹோட்டல் நிர்வாகத்தினர் இதுபோன்று இங்கு பேசக்கூடாது என கூறியதாகவும், அதற்கு ஹோட்டல் நிர்வாகத்தினரை தகாத வார்த்தையால் திட்டிய மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

செய்தியாக வெளியானது
இந்நிலையில் இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திகள் இன்று அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.

மீடியாக்களுக்கு எச்சரிக்கை
இதனை தொடர்ந்து மீரா மிதுனின் ரசிகர்கள் இதுகுறித்து அவர்களிடம் கேட்டனர். அதற்கு எல்லாமே ஃபேக் நியூஸ் என்று கூறியுள்ள மீரா மிதுன், தன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து இதுபோன்ற அவதூறு செய்திகளை பரப்பினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications