twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நீயே ஒரு டுபாக்கூர்'.. மீரா மிதுன் பவரை பிடுங்கிய அரசு.. சோழமுத்தா போச்சா.. சிரிக்கும் நெட்டிசன்ஸ்!

    குற்றப் பின்னணி இருப்பதால் ஊழல் தடுப்பு ஆணையத்தின் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் நடிகை மீரா மிதுன்.

    |

    சென்னை: ஊழல் தடுப்பு ஆணையத்தின் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் நடிகை மீரா மிதுன்.

    சர்ச்சை நாயகி மீரா மிதுன் பற்றி தினமும் ஒரு செய்தியாவது வராமல் இருப்பதில்லை. ஏதாவது பேசி, யாரையாவது வம்பிழுத்து, கவர்ச்சியாக உடை அணிந்து என ஏதாவது ஒரு விஷயம் அவரை பற்றி செய்திகளில் வந்துவிடும்.

    சீர்கெட்டுப்போயிருக்கும் தமிழ்நாட்டு அரசியலை தூக்கி நிறுத்தி, சுத்தம் செய்யப்போவதாக சமீபத்தில் சபதம் எடுத்தார் மீரா மிதுன். அவர் முதலில் ஒழிக்க நினைத்தது ஊழலை. அதற்காக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராக சேர்ந்தார்.

    பாலிவுட்டின் மஞ்ச காட்டு மைனா... கியாரா அத்வானியின் வெரி ஹாட் போட்டோஸ்!பாலிவுட்டின் மஞ்ச காட்டு மைனா... கியாரா அத்வானியின் வெரி ஹாட் போட்டோஸ்!

    ஊழல் தடுப்பு அதிகாரி

    ஊழல் தடுப்பு அதிகாரி

    இதுதொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையின் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்தார். மீரா மிதுனுக்கு எப்படி இந்த பதவி கிடைத்தது என ஆராய்ந்த போது, பணம் கட்டினால் யார் வேண்டுமானாலும் அந்த அட்டையை வாங்கலாம் என்பது தெரியவந்தது.

    டம்மி பதவி

    டம்மி பதவி

    மீரா மிதுன் வகித்து வந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனர் பதவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அரசு அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை தகவல் அளிக்கும் உரிமை மட்டுமே இருக்கிறது.

    மீரா நீக்கம்

    மீரா நீக்கம்

    இந்நிலையில் அந்த டம்மி பதவியும் மீராவிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. மீராவுக்கு குற்றப் பின்னணி இருப்பதே அதற்கு காரணம். பல மோசடி வழக்குகளில் மீரா மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதற்கான காவல்துறை விடுவிப்பு சான்றிதழை மீரா சமர்ப்பிக்கவில்லையாம்.

    அடுத்த அதிரடி

    அடுத்த அதிரடி

    எனவே மீராவிடம் இருந்து ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனர் பதவியை பறித்து, அந்த ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத மீரா, அடுத்த அதிரடியுடன் சீக்கிரம் வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    English summary
    The Central Anti corruption commission have removed actress Meera Mithun from its Tamilnadu state director post, as she has a crime background.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X