நல்லவேளை ரஜினி தப்புச்சுட்டாரு.. பேட்ட படத்துல திரிஷா கேரக்டர்ல மீரா தான் நடிக்கிறதா இருந்துச்சாம்!

பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதலில் மீரா தான் நடிக்க இருந்தாராம்.

Recommended Video

Bigg Boss 3 Tamil:Promo 2:Checkmate for meera குறும் படம் போட்டு மீராவை அசிங்கப்படுத்திய கமல்

சென்னை: பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக, திரிஷா கேரக்டரில் நான் தான் நடிக்க தேர்வானேன் என நடிகை மீரா மிதுன் அளித்த பேட்டி தற்போது வைரலாக பரவி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்துகொண்டு தமிழக மக்களின் பி.பியை (BP) எகிற வைக்கிறார் நடிகை மீரா மிதுன். வனிதாவுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு மீரா தான் கேரண்டி.

அதிலும் குறிப்பாக நேற்று முன் தினம் சேரன் மீது அவர் பழி போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நெட்டிசன்கள் எல்லாம் அவாது பழைய பேட்டிகளை, போட்டோக்களை எடுத்து மீண்டும் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீரா அளித்த பேட்டி. அதாவது பேட்ட படம் ரிலீசான புதிதில், கடந்த ஜனவரி மாதம் அவர் இப்பேட்டியை அளித்துள்ளார். அதில், பிக் பாஸ் இந்த அளவுக்கு அட்ராசிட்டி செய்யும் மீரா, பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக, திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க நான் தான்முதலில் தேர்வானேன்' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். பேட்ட: த்ரிஷா ரோலில் நான் தான் நடிச்சிருக்கனும்... பரபரப்பை கிளப்பும் நடிகை!

பேட்ட:

பேட்ட:

இதுபற்றி அவரே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர், "ஒரு பெண் நடிக்க வந்துவிட்டாலே அவள் கதாநாயகிதான். எனவே குணச்சித்திர வேடம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. முக்கிய கேரக்டர் கதையின் மையக்கருவாக அல்லது கதையின் திருப்பத்திற்கு வழிவகுக்கும் முக்கிய கேரக்டர் என எதுவாக இருந்தாலும் அதில் நான் சிறப்பாக நடிப்பேன்.

ஸ்கிரீன் டெஸ்ட்:

ஸ்கிரீன் டெஸ்ட்:

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட' படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டேன். லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றேன். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு கைகூடாமல் போய்விட்டது. எனக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார் என்பது சமீபத்தில் தான் தெரியவந்தது.

கடாரம் கொண்டான் :

கடாரம் கொண்டான் :

அதேபோல் கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்' படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். சில காரணங்களால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பும் விலகிப்போய்விட்டது. விலகிப்போன வாய்ப்புகள் மீண்டும் வேறு வடிவத்தில், வேறு படங்களில் என்னை தேடிவரும்" என அவர் குறிப்பிட்டிருந்தார்.

ரஜினி தப்பிச்சுட்டார்:

ரஜினி தப்பிச்சுட்டார்:

அப்போது இந்தப் பேட்டி அவ்வளவாக பரபரப்பை கிளப்பவில்லை. இப்போது பிக் பாஸ் வீட்டில் மீரா செய்யும் பிரச்சினைகளால், அவரது கடந்தகால வாழ்க்கையை நெட்டிசன்கள் தூசி தட்டத் தொடங்கியுள்ளனர். அதில் ஒன்றாகத்தான் இந்தப் பேட்டி இப்போது வைரலாகியிருக்கிறது. நல்லவேளை மீராவை பேட்ட படத்தில் ஒப்பந்தம் செய்யவில்லை. இல்லையென்றால், இப்போது சேரன் மீது பழி சொன்ன மாதிரி, அப்போது ரஜினி மீதும் சொல்லி இருப்பார்' என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X