மீரா நல்ல வெவரம் தான்.. பிக் பாஸ்ல இருந்து வெளில வந்ததும் செம ‘ஹாட்’டா அப்டேட் கொடுத்திருக்காங்க!
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி ஒரு நாள் கூட ஆகாத நிலையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மீரா மிதுன்.
பிக் பாஸ் வீட்டை ரணகளப்படுத்திக் கொண்டிருந்த மீரா நேற்று வெளியேறிவிட்டார். ஹவுஸ் மேட்ஸ்க்கு இது ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் வருத்தம் தான். மீரா போன்ற ஜாலியான பெண்ணை மிஸ் செய்வதாக சாண்டி மாஸ்டர் புலம்புவதை பார்க்க முடிந்தது.
மீரா மீது ரசிகர்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கிறதோ, அதே அளவுக்கு கமல் மற்றும் பிக் பாஸ்க்கும் கோபம் இருப்பதை நேற்றைய எபிசோடில் உணர முடிந்தது. வனிதா அளவுக்கு கூட பேச வாய்ப்பளிக்காமல் சட்டென மீராவை வெளியேற்றிவிட்டார் கமல்.

மீராவின் பாலிசி:
ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு முடங்கிக் கிடப்பவர் அல்ல மீரா மிதுன். எவ்வளவு அடிவாங்கினாலும் கைப்புள்ள வடிவேலு பாணியில், 'நெக்ஸ்ட் மீட் பண்றேன்'னு போய்கிட்டே இருப்பார். இந்த அளவுக்கு டேக் இட் ஈஸி பாலிசி கொண்ட பெண்ணை பார்க்கவே முடியாது. இதை அவரே பிக் பாஸ் வீட்டில் பலமுறை கூறி இருக்கிறார்.

வைரல்:
தற்போது அவர் செய்திருக்கும் காரியம் அதை உண்மை என நிரூபித்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி ஒருநாள் கூட ஆகாத நிலையில், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். தனது சமூகவலைதளம் மூலம் மீரா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் தீயாக பரவி வருகிறது.

ஆதரவுக்கு நன்றி:
செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள மீரா, ரசிகர்களுக்கும், தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றி என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். ஆனால், ரசிகர்களோ, ‘நாங்கள் ஆதரவு தந்திருந்தால், இந்நேரம் நீங்கள் பிக் பாஸ் வீட்டில் தானே இருந்திருப்பீர்கள். இப்படி வெளியில் வந்திருக்க மாட்டீர்களே' என மீராவைக் கலாய்த்து வருகின்றனர்.
ரசிகர்கள் ஹேப்பி:
ஆனால், இந்த புகைப்படங்களை வெளியிட்டிருப்பதன் மூலம், தான் அடுத்த ஆட்டத்துக்கு ரெடி என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் மீரா. மேலும், "நான் தேங்கிய குட்டையில் இல்ல. ஓடும் நதி போன்றவள்", என்பதையும் மறைமுகமாக எடுத்துக் கூறியிருக்கிறார் என அவரது ரசிகர்கள் சிலர் பாராட்டியுள்ளனர்.

இயக்குநர்கள் ரெடியா?
அப்புறம் என்ன டைரக்டர்ஸ், மீராவுக்காக ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிக்க வேண்டியது தானே. ஏனென்றால், ஜூலிக்கே ஸ்கிரிப்ட் எழுதி ஹீரோயினாக்கியவர்கள் நம் இயக்குனர்கள். மீராவுக்காக படம் எடுக்காமலா போய்விடுவார்கள். இன்னும் எத்தனை கொடுமைகளை தான் நாம் பார்க்கப் போகிறோமோ எனும் உங்கள் மைண்ட் வாய்ஸ் வெளியில கேட்குது மக்கா... விடுங்க பாஸ் எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்.


Click it and Unblock the Notifications











