என்னா...து.. மீரா மிதுன சிம்புவும், ஜீவாவும் காதலிச்சாங்களா!?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் தன்னை நடிகர்கள் சிம்பு மற்றும் ஜீவா ஆகியோர் காதலித்ததாக கூறிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் கடந்த 2016ஆம் ஆண்டு ஃபெமினாஸ் அமைப்பு நடத்திய மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பட்டம் பெற்றவர். ஆனால் அவர் மீது பல்வேறு பண மோசடி புகார்கள் எழுந்ததால் பட்டத்தை திரும்ப பெற்றது.
மீரா மிதுன் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணம் பெற்றுவிட்டு ஏமாற்றியதாகவும் அவர் மீது காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதேபோல் நடிகை ரஞ்சிதாவும் மீரா மிதுன் தன்னிடம் பெற்ற பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டதாக சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

மீராவை கிழித்த கமல்
இததொடர்பாக போலீசார் மீரா மிதுனை தேடி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று விசாரித்தனர். பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற மீரா, சக ஹவுஸ்மேட்ஸான சேரன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். ஆனால் சேரன் மீது அவர் கூறிய குற்றச்சாட்டு பொய்யென குறும்படம் போட்டு அவரது முகத்திரையை கிழித்தார் கமல்.

ஷனம் ஷெட்டியின் ஃபிரன்ட்
சேரன் மீது பொய் புகார் கூறியதால் மக்களின் கோபத்திற்கு ஆளானார் மீரா மிதுன். இந்நிலையில் மீரா மிதுன் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் தர்ஷனின் காதலியான ஷனம் ஷெட்டி. மிஸ் சவுத் இந்தியா போட்டியின் போது மீரா, ஷனம் ஷெட்டிக்கு பழக்கமானதாக தெரிகிறது.

சிம்பு என்னை காதலித்தார்
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஷனம் ஷெட்டி, மீரா மிதுன் காரணமே இல்லாமல் நிறைய பொய் பேசும் குணம் உடையவர் என கூறியுள்ளார். நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக மீரா என்னிடம் ஒரு முறை கூறியுள்ளார்.

நடிகர் ஜீவா காதலித்தார்
பின்னர் நடிகர் ஜீவா தன்னை காதலிப்பதாகவும் மீரா தன்னிடம் கூறியதாகவும் ஷனம் ஷெட்டி கூறியுள்ளார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் தன்னை காதலிப்பதாக கூறியிருக்கிறார் மீரா. மீராவை ஏன் தான் எல்லோரும் காதலிக்கிறார்களோ என கிண்டலாக கேட்டுள்ளார் ஷனம் ஷெட்டி.

மீராவின் மேட்டர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா தன்னை காதலிப்பதாக கூறி தர்ஷன் ஏமாற்றிவிட்டதாக கமலிடம் கூறினார். இதனைக் கேட்டு டென்ஷனான ஷனம் ஷெட்டி, மீராவின் மேட்டர்களை எடுத்துவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











