அந்த நடிகரின் தற்கொலைக்கு சனம் ஷெட்டியுடனான உறவுதான் காரணம்.. பிரபல நடிகை போட்ட பகீர் குண்டு!

சென்னை: அம்புலி பட நடிகர் அஜயின் தற்கொலைக்கு சனம் ஷெட்டிதான் காரணம் என நடிகை மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று சக போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதன் உச்சக்கட்டமாக இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

விமர்சனம்

விமர்சனம்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைத்து இளைஞர்களுக்கும் தன் மீது காதல் இருந்ததாக கூறினார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சித்து வந்தார்.

பிக்பாஸ் சீசன் 4

பிக்பாஸ் சீசன் 4

அதோட முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா குறித்து தரக்குறைவாக பேசிய மீரா மிதுன், அவர்களின் குடும்பத்தாரையும் இழுத்துப் பேசினார். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்.

இளம் நடிகர் தற்கொலை

இளம் நடிகர் தற்கொலை

அந்த வகையில் மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்திருக்கும் பதிவு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சனம் ஷெட்டி இளம் நடிகர் ஒருவரின் தற்கொலைக்கு காரணமானவர் என கூறியுள்ளார்.

அம்புலி பட ஹீரோ

அம்புலி பட ஹீரோ

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பிக்பாஸ் சீசன் 4 ஷோவில் டுபாக்கூர் பங்கேற்றிருக்கிறார். உண்மையில் அவர் ஒரு கொலைக்காரர்.. அவருடனான உறவு காரணமாக அவரது முதல் திரைப்படமான அம்புலி படத்தின் ஹீரோ தற்கொலை செய்து கொண்டார்.

ஏன் கைது செய்யப்படவில்லை

அந்த ஆத்மாவுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை என்பது சோகம். யாரோ ஒரு ஹேட்டர் எனக்கு வாட்ஸ்அப் பண்ணியிருக்காங்க, ரிப் அஜய்.. கொலைக்காக ஏன் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.. என கேட்டு சனம் ஷெட்டியும் அஜயும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார் மீரா மிதுன்.

தர்ஷன் தப்பிச்சுட்ட

மற்றொரு பதிவில் தர்ஷன் நீங்கள் காப்பாற்றப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி. உங்களின் பாதுகாப்பும் உயிருடன் இருப்பதும்தான் முக்கியம். யார் கொலைக்காரர் யார் குற்றவாளி யார் என்பதை இப்போது மக்கள் நன்கு அறிவார்கள், இந்த தீய பெண்ணால் நீங்கள் தேவையில்லாமல் சமூகத்திற்கு கெட்டவராக காட்டப்பட்டு விட்டீர்கள். நிகழ்ச்சியின் உள்ளே நான் உங்களிடம் உண்மையைச் சொன்னேன் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஏகப்பட்ட பிரச்சனைகள்

மேலும் மற்றொரு பதிவில், நான் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க சார், அவர் ஒரு டுபாக்கூர், கொலைக்காரர், கிரிமினல்.. இந்த தீய பெண்ணால் என் வாழ்க்கையில் 2 வருடங்களாக ஏகப்பட்ட பிரச்சனை. என்னைப்பற்றி அவதூறாக பேசினார், சைபர் புல்லிங் செய்தார், மிரட்டினார் என்னை சித்ரவதை செய்தார் என சனம் ஷெட்டியை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

ஏழாம் பொருத்தம்

ஏழாம் பொருத்தம்

ஏற்கனவே மீரா மிதுனுக்கும் சனம் ஷெட்டிக்கும் ஏழாம் பொருத்தமாய் உள்ளது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் மீரா மிதுன் வென்ற அழகிப்பட்டத்தை பிடுங்கி சனம் ஷெட்டியிடம்தான் கொடுத்தார்கள். அதோடு கடந்த சில நாட்களுக்கு முன்பு சனம் ஷெட்டி மீரா மிதுன் மீது புகார் அளித்தார்.

பகீர் டிவிட்

பகீர் டிவிட்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சனம் ஷெட்டி, சக போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக வயதில் மூத்தவரான சுரேஷ் சக்கரவர்த்தியை போடா வாடா என படு மோசமாக பேசினார். அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீரா மிதுன் இப்படி ஒரு டிவிட்டை பதிவிட்டு பகீர் கிளப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X