தமிழ் சினிமா விபச்சார கூடாரமாக உள்ளது.. நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கே ஆர்டர் போடும் மீரா மிதுன்!

சென்னை: நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமா விபச்சார கூடமாக உள்ளது என்றும் இதில் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தமிழ் சினிமா பிரபலங்கள், தமிழக அரசியல் தலைவர்கள், கடந்த கால அதிமுக அரசு என யாரையும் விட்டு வைக்காமல் கன்னாபின்னாவென பேசி சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் பட்டியலின சாதியினர் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். தனது ஆண் நண்பருடன் சேர்ந்து மீரா மிதுன் வெளியிட்ட அந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குற்றப் பின்னணி உடையவர்கள்

அதில் சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருந்தது. சினிமாத் துறையில் இருந்து அந்த குறிப்பிட்ட சாதி இயக்குநர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா உருப்படும் என்பதை போல் பேசியிருந்தார். மேலும் அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் திட்டுகிறார்கள் ஒதுக்குகிறார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கண்டனங்களும்

பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கண்டனங்களும்

மீரா மிதுனின் அந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்தன. இதனை தொடர்ந்து நடிகை மீரா மிதுன் விசிக உட்பட பல்வேறு அமைப்புகள் தமிழகம் முழுவதும் புகார் அளித்தன. இதனை தொடர்ந்து மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இதுதொடர்பாக நேரில் ஆஜராகுமாறும் மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

ஆர்டர் போடுவது போல் ஆட்டியூட் காட்டி

ஆர்டர் போடுவது போல் ஆட்டியூட் காட்டி

இந்நிலையில் தனது யூட்யூப் தளத்தில் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை மீரா மிதுன். அதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆங்கிலத்திலும், முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழிலும் கோரிக்கை வைப்பதாக நினைத்து ஆர்டர் போடுவது போல் ஆட்டியூட் காட்டி பேசியுள்ளார் மீரா மிதுன். பிரதமர் மோடிக்கு அவர் ஆங்கிலத்தில் பேசியிருப்பதாவது,

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்கிறது

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்கிறது

பிரதமர் மோடிஜி அவர்களே, ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்கிறது. தமிழ்நாட்டு பெண்கள் நிறைய பிரச்னைகளை சந்திக்கின்றனர். தமிழகத்தில் பெண்களின் வளர்ச்சி கேள்விக் குறியாகியுள்ளது. நான் மீரா மிதுன், இந்தியாவின் சூப்பர் மாடல், நடிகை, தொழிலதிபரான நான் தமிழக பெண்களால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன்.

தமிழ் சினிமா விபச்சார கூடாரமாக உள்ளது

தமிழ் சினிமா விபச்சார கூடாரமாக உள்ளது

தவறான தகவல்கள் மூலம் எனது பெயரை கெடுக்கும் வேலைகள் கடந்த 5 ஆண்டுகளாக நடக்கிறது. பொதுமக்கள் மத்தியில் என்னைப் பற்றி தவறான பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். என்னை பற்றிய சர்ச்சைகளுக்கு என்னுடைய சொந்த பிளாட்ஃபார்மில் இருந்து நான் விளக்கமளித்து வருகிறேன். என்னுடைய முக்கிய பிரச்சனை நான் கோலிவுட் சினிமாவில் நெப்போட்டிஸத்தை ஃபேஸ் செய்து வருகிறேன. தமிழ் சினிமா விபச்சார கூடாரமாக உள்ளது.

தமிழகத்தில் சட்டங்களை கடுமையாக்க வேண்டும்

தமிழகத்தில் சட்டங்களை கடுமையாக்க வேண்டும்

தமிழ்நாட்டில் தொடர்ந்து டார்க்கெட் செய்யப்படுகிறேன். தமிழ் பெண்ணாக நான் நிறைய சவால்களை சந்தித்து வருகிறேன். நான் சினிமாத்துறையால் நிறைய பிரச்னைகளை சந்திக்கிறேன். இங்கு தமிழ் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் எளிதாக அரங்கேற்றப்படுகிறது. நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டங்களை கடுமையாக்க வேண்டும். நான் புத்திசாலியாகவும் திறமைசாலியாகவும் இருப்பதால் என் வளர்ச்சியை தடுக்கிறார்கள்.

என் முகத்தை போல் பிளாஸ்டிக் சர்ஜரி

என் முகத்தை போல் பிளாஸ்டிக் சர்ஜரி

கோலிவுட்டில் நிறைய மோசடி நடக்கிறது. என்னுடைய முகத்தை போல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மோசடி செய்கிறார்கள். இதற்காக நான் எச்சரிக்கை மட்டுமே விடுத்துள்ளேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விஷயங்களுக்கெல்லாம் கோர்ட் கேஸ் என அலைந்து என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது. இன்னும் உயரே போக வேண்டும். நான் நிறைய விஷயங்களை சாதிக்க வேண்டும்.

நான் அரசியல்வாதியாக சேவை செய்ய வேண்டும்

நான் அரசியல்வாதியாக சேவை செய்ய வேண்டும்

கோலிவுட், மாடலிங், கேரியர், என் கனவுகள் மற்றும் இந்த சமூகத்திற்காக நான் உழைக்க வேண்டும். ஒரு அரசியல்வாதியாக நான் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும். தற்போது எனக்கு நிறைய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. நான் உலகளவிலும், இந்தியளவிலும் கோலிவுட் அளவிலும் சத்தமாக பேசும் அளவுக்கு எனக்கு வேலை இருக்கிறது. எனக்கு கோலிவுட்டில் இருந்து நிறைய பிரச்சனைகள் வருகிறது.

Recommended Video

#BREAKING நடிகை மீரா மிதுன் கைது!
தமிழகத்தில் ஏன் வாழ முடியவில்லை?

தமிழகத்தில் ஏன் வாழ முடியவில்லை?

ஒரு தமிழ் பெண் உலகளவிலும் தேசிய அளவிலும் வெற்றி பெற்றவராக இருந்தாலும் கூட தமிழகத்தில் வாழ ஏன் கஷ்டப்பட வேண்டியுள்ளது? தற்போது எனக்கான துன்புறுத்தல்கள் அதிகமாகிவிட்டது. மக்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என பிரசாரம் செய்து வருகின்றனர். இதை கடந்த 5 ஆண்டுகளாக கேட்டு வருகிறேன். இப்படி செய்திகள் வரும் ஆனால் முழுமையாக காணாமல் போய்விடும்.

தமிழகத்தில் துன்புறுத்தல் என்பது சர்வ சாதாரணம்

தமிழகத்தில் துன்புறுத்தல் என்பது சர்வ சாதாரணம்


இதுபோன்ற துன்புறுத்தல்களை பெண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் ஒரு வெற்றி பெற்ற பெண்ணுக்கு அளிக்கப்படும் துன்புறுத்தல் என்பது சர்வ சாதாரணம். பெண்ணுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்வது தமிழகத்தில் ரொம்பவே எளிதானது. தமிழகத்தில் சோஷியல் மீடியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் ஆண்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நடிகை மீரா மிதுன் பேசியுள்ளார். மீரா மிதுனின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X