நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் செல்பி.. சர்ச்சை நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை மீரா மிதுன் நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்த செல்பியை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துள்ளனர்.
நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அழகிப் போட்டி, ஜோடி நம்பர் ஒன், பிக்பாஸ் நிகழ்ச்சி என அவர் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சியிலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளார். எல்லாமே நெகட்டிவ் பிரபலம் தான்.

மோடியிடம் கோரிக்கை
முதல்வர் ஆசையில் உள்ள மீரா மிதுன், அவ்வப்போது தமிழக அரசு குறித்து விமர்சித்து வருகிறார். அமைச்சர்களையும் சாடி வரும் மீரா மிதுன் தன்னை தமிழகத்தின் முதல்வராக்குமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்து விருகிறார்.

தன்னை பார்த்து காப்பி
அதோடு நடிகர் நடிகைகளையும் விட்டு வைப்பதில்லை மீரா மிதுன். நடிகர் நகைகள் என யார் தங்களின் போட்டோக்களை ஷேர் செய்தாலும் தன்னை பார்த்து காப்பி அடித்துதான் இப்படி போட்டோக்களை ஷேர் செய்கிறார்கள் என விளாசி வருகிறார்.
Recommended Video

உதயநிதியுடன் போட்டோ
அந்த வகையில் அண்மையில் த்ரிஷாவை வம்பிழுத்து வாங்கிக்கட்டினார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்த போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவுக்கு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம், ஒன்றாக வெற்றி பெருவோம் என ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டுள்ளார்.

ஆளே இல்ல போல
இதனை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை வச்சு செய்துள்ளனர். மீரா மிதுன் உலகத்தில் செல்பி எடுக்காத ஆளே இல்லை போல என கலாய்த்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், இவர்களையெல்லாம் வைத்து இந்த மாதிரி போட்டோக்களை போட்டு ஃபேமஸ் ஆக பாக்றீங்களா என பங்கம் செய்துள்ளனர்.

கேவலப்படுத்திவிடுவார்
சில நெட்டிசன்கள், ஸ்டாலின் சார் ஏன் இவருடன் சேர்ந்தீர்கள், உங்கள் பெயரை கேவலப்படுத்தி விடுவார் என எச்சரித்துள்ளனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் சக போட்டியாளரான இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











