'அந்த மாதிரி' ஃபீலிங்ஸை கொடுக்கிறாய்.. காதலருக்காக டிவிட்டரில் உருகும் பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: பிக்பாஸ் பிரபலமான நடிகை மீரா மிதுன் தனது காதலரை நினைத்து டிவிட்டரில் உருகி வருகிறார்.
தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதுன். பிரபல மாடலான இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
படங்களில் நடித்திருந்த போதும் விஜய் டிவியில் கடந்த மாதம் வெளியான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார்.

திருமணம் குறித்த தகவல்
நடிகை மீரா மிதுன் தனக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாக அண்மையில் அறிவித்தார். தான் திருமணம் செய்து கொள்ள உள்ள நபர் குறித்த தகவலை ரகசியமாக வைத்து வரும் மீரா மிதுன், சமூக வலைதளங்களில் அவருக்கு உருகி வருகிறார்.

பாடல் வரிகள்
அந்த வகையில் அண்மையில் தன்னுடைய போட்டோக்களை ஷேர் செய்து, மன்மதன் படத்தில் இடம் பெற்ற மன்மதனே நீ கலைஞன்தான் என்ற பாடலின் வரிகளை கேப்ஷனாக கொடுத்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு வேலையா என விளாசினர்.

மீண்டும் கிளாமர்
ஆனால் அவர் வெளியிட்ட போட்டோக்கள் ஓரளவுக்கு டீசன்ட்டாய் இருந்ததால், அந்த அளவுக்கு கழுவி ஊற்றவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் பழையப்படி கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்ய தொடங்கியிருக்கிறார் மீரா மிதுன்.
எல்லாமும் அவர்தான்
அந்த வகையில் மார்பு வரை மட்டுமே உள்ள ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார் மீரா மிதுன். அந்த போட்டோவுக்கு, எனக்கு வேண்டிய எல்லாமும் அவர்தான் என கேப்ஷன் கொடுத்துள்ளார். மற்றொரு போட்டோ நான் விரும்பும் எல்லாமும் அவர்தான் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த மாதிரி ஃபீலிங்ஸ்
அதே உடையில் முழு போட்டோவையும் ஷேர் செய்துள்ள மீரா மிதுன், அதில் முட்டிவரை டாப்ஸை தூக்கி ஒரு பக்கமாக பார்த்தப்படி அமர்ந்துள்ளார். அந்த போட்டோவுக்கு மக்கள் நாவல் எழுதுவாங்களே அதுபோன்ற பீலிங்ஸை கொடுக்கிறாய் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
Recommended Video
தியாக செம்மல் எங்கம்மா
ஒரு பக்கம் மட்டுமே ஸ்லீவ் கொண்ட நீண்ட கறுப்பு நிற கவுனை அணிந்துள்ள மீரா மிதுன், நான் எடுத்துக் கொண்டேன்.. நான் என்னவரை நினைத்து பெருமை படுகிறேன் என கேப்ஷன் கொடுத்துள்ளர். மீரா மிதுனின் இந்த போட்டோக்களைய்ம கேப்ஷன்களையும் பார்த்த நெட்டிசன்கள் அந்த தியாக செம்மல் எங்கம்மா என கேட்டு கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











