வனிதா - பீட்டர்பால் விவகாரம்.. பிரபல சினிமா தயாரிப்பாளரை நார் நாராய் கிழித்த நடிகை!

சென்னை: வனிதா தனது மூன்றாவது கணவரை பிரிந்த விவகாரம் குறித்து தகவல் தெரிவித்த பிரபல தயாரிப்பாளரை நடிகை மீரா மிதுன் விளாசியுள்ளார்.

நடிகை வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இதனால் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் போலீஸில் புகார் அளித்தார்.

அதோடு தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என தயாரிப்பாளரனா ரவீந்தர் சந்திரசேகர், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பிரபலங்களிடம் கோரிக்கை விடுத்தார்.

வனிதா விமர்சனம்

வனிதா விமர்சனம்


இதனை தொடர்ந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் கடுப்பான வனிதா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் ரவீந்தரை கடுமையாக விமர்சித்தார்.

வனிதாவுக்கு கண்டனம்

வனிதாவுக்கு கண்டனம்

தரக்குறைவான வார்த்தைகளால் அவர்களை திட்டி தீர்த்தார். குறிப்பாக லக்ஷ்மி ராமகிருஷ்ணனை கெட்ட வார்த்தையால் லைவ் டெலிகாஸ்ட்டில் கிழித்துவிட்டார் வனிதா. அதனை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் வனிதாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

விரட்டியடித்து விட்டார்

விரட்டியடித்து விட்டார்

இந்நிலையில் நடிகை வனிதா தனது கணவரான பீட்டர் பாலை பிரிந்து விட்டார். பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையானதால் அவரை வீட்டை விட்டே வனிதா விரட்டியடித்து விட்டதாக தகவல் பரவியது.

வீட்டை விட்டு போய்விட்டார்

வீட்டை விட்டு போய்விட்டார்

ஆனால், இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட வனிதா, பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையாகிவிட்டார். வீட்டிற்கே வரவில்லை. எங்கு சென்றாரோ தெரியவில்லை. போனும் சுவிட்ச் ஆஃபில் உள்ளது. அவரது முதல் மனைவியான எலிசபெத் ஹெலனே பீட்டர் பாலுடன் வாழட்டும் நான் குறுக்கே வரவில்லை என்றார்.

தோற்றுவிட்டேன்

தோற்றுவிட்டேன்

பீட்டர் பாலை நம்பி தான் ஏமாந்துவிட்டதாகவும் தோல்வியடைந்து விட்டதாகவும் கண்ணீர் மல்க கூறினார். ஏதோ ஒரு காரணத்திற்காக அவரது வாழ்க்கையில் வந்தேன். நடுவில் வந்தேன் நடுவிலேயே போய்விடுகிறேன் என உருக்கமாக பேசியிருந்தார்.

மீரா மிதுன் வீடியோ

வனிதாவின் வீடியோதான் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்த விவகாரத்தை முதலில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தரை விளாசியுள்ளார் நடிகை மீரா மிதுன்.

உத்தமர்..

உத்தமர்..

இதுதொடர்பாக மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, அடுத்தவங்க வாழ்க்கையில நடக்குறத என்னன்னு பார்த்து வெரிஃபைடு நியூஸ் கொடுக்றீங்க.. அவங்களே அமைதியா பிரிஞ்சு, அவங்கவங்க வாழ்க்கையை பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணி போறாங்க.

அசிங்கப்படுத்திட்டாங்க

அசிங்கப்படுத்திட்டாங்க

ஆனா அதை உடனே ஒரு புரெடியூசர் வெரிஃபைடு நியூஸ்னு போட்டு.. அதை மத்த யூடியூப் சேனல், பிரஸ், மீடியா என எல்லாரும் போட்டு அந்த குடும்பத்தையே அசிங்கப்படுத்திட்டாங்க. இப்போ அந்த ஃபேமிலிய அசிங்கப்படுத்துனதால உங்களுக்கு என்ன கிடைச்சுது..

கிரிமினல்ஸ்கூட

கிரிமினல்ஸ்கூட

உங்க சேனல் டிஆர்பிக்காக இவ்ளோ கீழ்த்தரமான வேலையெல்லாம் செய்யனுமா.. அதானே கிரிமினல்ஸ்கூட சேர்ந்து ஃபிரண்ட்ஷிப் வச்சு ஜால்ரா அடிச்சா அப்படிதான் ஆகும். அந்த ஃபேமிலில ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க.. இந்த சைபர்புல்லிங்களால அவங்களும் அஃபெக்ட் ஆகுறாங்க.

அழ வச்சுட்டாங்க

அழ வச்சுட்டாங்க


இதெல்லாம் நீங்க பண்றது எதுக்கு? வெறும் டிஆர்பிக்காகவும் வியூஸ்க்காகவும். வனிதா விஜயக்குமார், ரொம்ப ஸ்ட்ராங்கான லேடி. போல்டான லேடி.. அந்த மாதிரி பண்றதுக்கான சான்ஸ் இல்லன்னு நம்புறேன். ஆனா அவங்கள அழ வச்சுட்டாங்க.. எப்படியோ.. அவங்க எங்கே இருந்தாலும் அவங்க நல்லாருக்கனும்னு நான் ஆண்டவன பிரார்த்திக்கிறேன். இவ்வாறு மீரா மிதுன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X