த்ரிஷாவை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் மீது பாய்ந்த மீரா மிதுன்.. காப்பி கேட் என கண்டபடி விளாசல்!
சென்னை: நடிகை த்ரிஷா மீது பாய்ந்த நடிகை மீரா மிதுன் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷையும் கடுமையாக விளாசியிருக்கிறார்.
Recommended Video
மாடலான மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம், எட்டு தோட்டாக்கள் ஆகிய படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
சர்ச்சைகளில் சிக்கியே பெரும் பிரபலமானவர் மீரா மிதுன். சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சினிமா பிரபலங்களை பற்றி பேசியாவது செய்திகளில் இடம் பிடித்து வருகிறார்.

காப்பிடியத்துதான்..
அந்த வகையில் தன்னுடைய போட்டோ ஷுட்டுக்களை பார்த்துதான் பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து நடிகைகளும் போட்டோ ஷுட் நடத்துகின்றனர் என குற்றம்சாட்டி வருகின்றார். தன்னை பார்த்து காப்பியடித்துதான் நடிகைகள் போட்டோ ஷுட் நடத்துவதாக கூறி வருகிறார்.

த்ரிஷாவிடம் வம்பு
ஏற்கனவே பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியின் போட்டோ ஷுட்டை பார்த்து தன்னை காப்பியடித்துவிட்டதாக தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான த்ரிஷாவை வம்பிழுத்தார்.

திட்டிய ரசிகர்கள்
த்ரிஷா தன்னுடைய போட்டோக்கள பார்த்து காப்பியடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகுவீர்கள் என எச்சரித்தார். இதனால் கடுப்பான த்ரிஷாவின் ரசிகர்கள், மீரா மிதுனை கடுமையாக திட்டி தீர்த்தனர்.
வெட்கம் கெட்டவர்கள்
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீது பாய்ந்திருக்கிறார் மீரா மிதுன். அதாவது மீரா மிதுனின் போட்டோ ஷுட்டை புகழ்ந்து தள்ளி அவரது ரசிகர், ஐஸ்வர்யா ராஜேஷும் த்ரிஷாவும் அவரை பார்த்து காப்பியடிப்பதாகவும் கூறியிருந்தார். இதனை பார்த்த மீரா மிதுன், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் டிவிட்டர் கணக்கை குறிப்பிட்டு வெட்கம் கெட்டவர்கள் என கூறியுள்ளார்.
ஜெராக்ஸ் நகல்
மற்றொரு பதிவில், ஆமாம், கோலிவுட்டில் ஏராளமான காப்பி கேட்டுகள் உள்ளன. அவை அசல் தன்மையைக் கொண்டிருக்கவில்லை... இந்த சமீபத்திய படம் மட்டுமல்ல அவளுடைய எல்லா படங்களும் என்னுடைய போட்டோக்களின் ஜெராக்ஸ் நகல். வெட்கமற்றவர் என ஐஸ்வர்யா ராஜேஷின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.
முயற்சி செய்யாதீர்கள்
மற்றொரு பதிவிலும் மீரா மிதுன் ஐஸ்வர்யா ராஜேஷை காப்பி கேட் என குறிப்பிட்டு, நீங்கள் சொந்தமாக செய்யுங்கள் என்னை காப்பியடித்து முக்கிய கதாப்பாத்திரங்களை பிடிக்க முயற்சி செய்யாதீர்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் காப்பி கேட்டுகள் எப்போதும் காப்பி கேட்டுகளாகவே இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
தமிழர்களை ஏமாற்றுகிறார்
மேலும் என்னை வைத்து பிழைப்பு நடத்துகிறார் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷை சாடியுள்ளார். மற்றொரு பதிவில், அவர் தெலுங்கு பெண், ஆனால் தமிழ் பெண் போல அனைவரையும் ஏமாற்றுகிறார். சாதாரண பக்கத்து வீட்டுப் பெண்ணை போன்று நடித்து, கடின உழைப்பு மற்றும் போராட்டத்தின் மூலம் வந்ததாக அனுதாபத்தை உருவாக்குகிறார். எல்லா தமிழர்களையும் ஏமாற்றுகிறார், உண்மையில் அவர் ஒரு நெப்போடிசம் புராடெக்ட். ஏமாற்ற என்ன ஒரு புதிய டெக்னிக் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷை விளாசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











