என் புகழைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதா? டிக்டாக்கிற்கு எதிராக பிரபல நடிகை..கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: தனது பெயரையும் புகழையும் பயன்படுத்தி சம்பாதித்த டிக்டாக் செயலி, அதைத் திருப்பித்தர வேண்டும் என்று நடிகை மீரா மீதுன் கூறியுள்ளார்.

Recommended Video

Meera Mithun Marriage • Official Statement | Bigg Boss, Thaana Serntha Kootam

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்திமாறி உள்பட சில படங்களில் நடித்தவர் மீரா மிதுன். சர்ச்சைகளுக்கும் இவருக்கும் அப்படியொரு பொருத்தம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், உடன் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 கிளாமர் புகைப்படங்கள்

கிளாமர் புகைப்படங்கள்

இதனால், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பின் மீரா, விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் மீது பரபரப்பு புகார் கூறினார். இதனால் சில படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். தற்போது அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இவர் போட்டோவை ரசிகர்கள் சரமாரியாக விளாசித்தள்ளுவதும் உண்டு.

 சர்ச்சையை கிளப்பினார்

சர்ச்சையை கிளப்பினார்

அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கிளாமர் ஸ்டில்களை பதிவேற்றி வருவதை வழக்கமாக்கி இருக்கிறார். சமீப காலமாக அரசியல் பக்கமும் அவர் பார்வை திரும்பி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன், தமிழ்நாடு அரசு குறித்தும் ஆட்சி குறித்தும் விமர்சித்து இருந்தார் நடிகை மீரா மிதுன். தன்னை முதல்வராக்கி, அந்த நாற்காலியில் உட்கார வையுங்கள், தமிழ்நாட்டை தலைகீழாக மாற்றி காட்டுகிறேன் என்றும் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

 கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில், சல்மான் கானுக்கு ஆதரவாக இவர் சில ட்வீட்களை போட்டு, நெட்டிசன்களிடம் நன்றாகவே வாங்கிக் கட்டிக் கொண்டார். பிறகு நடிகை கங்கனா ரனாவத்தை திட்டினார். எங்கள் மாநில முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக நடிக்க, உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேட்டிருந்தார். இதற்கும் ரசிகர்கள் விளாசினர்.

 மன்னிப்புக் கேட்கவேண்டும்

மன்னிப்புக் கேட்கவேண்டும்

இந்நிலையில் தனது பெயரையும் புகழையும் பயன்படுத்திய டிக்டாக் நிறுவனம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுபற்றி சமூகவலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: 'நான் டிக்டாக்-கை பயன்படுத்தவில்லை. பயன்படுத்தவும் மாட்டேன். ஆனால் டிக்டாக் புரொஃபைலில் எனது பெயர், ஹேஷ்டாக் இருக்கிறது. இந்தியர்களே எழுந்திருங்கள். சீன பிராண்டான டிக்டாக்கை புறக்கணியுங்கள்.

 சட்டவிரோதமாக

சட்டவிரோதமாக

எனக்குத் தெரியாமல், எனது பெயர் மற்றும் புகழை சட்டவிரோதமாக டிக்டாக் செயலி பயன்படுத்தி இருக்கிறது. இதற்குச் சட்டரீதியான நடவடிக்கைக்கு டிக்டாக் தயாராக இருக்கட்டும். எனது பெயர், ஹேஷ்டேக், மார்க்கெட் வேல்யூ ஆகியவற்றைப் பயன்படுத்தி எனக்குத் தெரியாமல் சம்பாதித்த பணத்தைத் திருப்பிக்கொடுக்க வேண்டும்.

 நீங்க புகழ்பெற்றவரா?

நீங்க புகழ்பெற்றவரா?

இதற்காக பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும்' என்று கூறியுள்ளார். இதையும் நெட்டிசன்கள் வழக்கம் போல கிண்டலடித்து வருகின்றனர். நீங்கள் புகழ்பெற்றவரா? உங்க புகழை பயன்படுத்தினாங்களா? என்று கேட்டு கலாய்த்துள்ளனர். இந்த ட்வீட்டை அவர் பிரதமர் மோடிக்கும் டேக் செய்துள்ளார். இதை குறிப்பிட்டுள்ள சிலர், இதை ஏன் அவருக்கு டேக் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X