எங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் சேரன் தன்னிடம் நடந்த கொண்ட விதத்தில் கமல் தனக்கு நியாயம் பெற்றுத்தரவில்லை என நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் படப்பிடிப்பில் இருந்து வருவதாக கூறி வரும் நடிகை மீரா மீதுன், அங்கிருந்தப்படியே ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் ஒரு வழியாக்கி வருகிறார். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விதவிதமாக வீடியோ வெளியிட்டு விளாசி வருகிறார் மீரா மிதுன்.

Meera mithun threatens Cheran and Kamal

ஏற்கனவே அக்னிசிறகுகள் படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு கமல்ஹாசன் காரணம், தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தன்னை நீக்கிவிட்டு தனது மகளை அந்த படத்தில் நடிக்க வைத்து விட்டார் என்றும், கோலிவுட்டில் கமல் குடும்பத்தின் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் சரமாரியாக சாடினார்.

இந்நிலையில் மும்பை பீச்சில் நடை பயணம் மேற்கொண்ட மீரா மிதுன், அங்கிருந்தபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டில் முதல் 4 வாரங்கள் பல போராட்டங்களுடன் தங்கியிருந்தேன். 4 வது வாரத்தில் வெளியில் இருந்து வந்து ஒருவர் நீங்கள் இந்த வாரம் காப்பாற்றப்பட்டீர்கள் என்றார். இப்படி நடந்தது கமலுக்கே இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.

5வது வாரத்தில் தான் அப்படியே சூழ்நிலை மாறிவிட்டது. நான் மேன் ஹேன்ட்லிங் நடந்ததாக கூறிய விஷயத்தை, சேரன் தான் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தை, என் பெயர் கெட்டுவிடும் என்று நடித்து நான் சொன்ன விஷயத்தை மாற்றி நடித்து அழுது ஒரு சீன் கிரியேட் செய்துவிட்டார்.

அப்போது அங்கிருந்த ஒரு ஹவுஸ்மேட் கூட என சப்போர்ட் செய்யவில்லை. அங்கிருந்த ஆம்பளைங்க எல்லாரும் சரியான கோழைங்க. ஒருத்தரும் எனக்காக நிக்கல. ரெண்டு பொண்ணு வச்சிருக்க சேரன் சார் எனக்கு இதை செஞ்சாரு. ரெண்டு பொண்ணு வச்சிருக்குற கமல் சாரும் எனக்கு இதுல நியாயம் கொடுக்கல.

அவரு ஏன் என்பக்கம் இருந்த நியாயத்த பார்க்கலன்னு எனக்கு தெரியல. அவங்க ரெண்டு பேருக்கும் உள்ள பொண்ணுங்களுக்கு நடந்திருந்தா என்ன பண்ணியிருப்பாங்கன்னு எனக்கு தெரியல. எங்க அப்பா இல்ல. அவரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு. எங்க அப்பா இருந்திருந்தா சீனே வேற.. அவரு என்ன பண்ணியிருப்பாருன்னு எனக்கு தெரியும். இவ்வாறு பேசியிருக்கிறார்.

மேலும் சில வீடியோக்களிலும் சேரனை கேவலமாக பேசி விளசியிருக்கிறார் மீரா மிதுன். சேரன் எல்லா விஷயத்தையும் செய்துவிட்டு இப்போது புனிதராகிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் எல்லா பெண்கள் மீதும் விழுந்து கட்டிப்பிடித்து விளையாடினார். சேரன் சார் பிக்பாஸ் வீட்டில் என்னிடம் எதிர்பார்த்தது, சரவணன் சார் சொன்னதை போலதான் அவரின் பேச்சை எல்லோரும் கேட்க வேண்டும் என்று.

சேரன் இப்போது நல்லவராகிவிட்டதால் தவறானவர் என நிரூபிக்கப்பட்ட ஜோடி நம்பர் ஒன் புரோகிராமில் கலந்துகொண்ட ஆசிஃப்பும் தன்னை நல்லவராக காட்டிக் கொள்கிறார். என்னை சைக்கோ என்றெல்லாம் பேசி வருகிறார். சேரன் எனக்கு என்ன மாதிரியான மென்டல் டார்ச்சரெல்லாம் கொடுத்திருக்கிறார் தெரியுமா.

என்னை பார்த்தாலே சேரனால் நிக்க முடியாது. நிஜமாவே அவருக்குதான் தாழ்வு மனப்பான்மை. ஆனால் எனக்கு தாழ்வு மனப்பான்மை இருப்பதாக சொல்வார். என்னுடைய அப்பா என்னை சரியாக வளர்க்கவில்லை என்று என்னிடம் கூறினார். என் அப்பாவை பற்றி பேச அவர் யார்? இந்த மாதிரி நிறைய விஷயம் பண்ணியிருக்கார்.

தமிழ் நாட்டுல மட்டும்தான் புகார் சொன்ன பொண்ணு மேலேயே திருப்பிவிடுறது நடக்கும். இப்படி ஒரு சீப்பான பப்ளிசீட்டி தேட நான் என்ன பைத்தியமா? நான் தான் போல்டான பொண்ணு, எல்லா விஷயத்தையும் தைரியமா வெளியே சொல்றது நான் மட்டும்தான். ஏன் ஆம்பளைங்களுக்குகூட தைரியம் இல்ல. அத்தனை ஆம்பைளங்க அங்கே இருந்தாங்க, ஆனா யாரும் எதுவும் பேசல, என்ன நடந்துச்சுன்னு கூட கேட்காம ஃபுல்லா சேரனுக்குதான் சப்போர்ட் பண்ணாங்க.

இதுக்கு நியாயம் எனக்கு கிடைக்கல. சேரன் சார் என்கிட்ட மன்னிப்பும் கேட்கல பொதுவா எல்லார்கிட்டேயும் மன்னிப்பு கேட்டாரு. என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்கல, அவரு செஞ்சதையும் ஒத்துக்கல. சேரன் சார் மனசாட்சிக்கு தெரியும் அவரு என்ன பண்ணாருன்னு.

அவருக்கு துணிச்சல் இருந்துச்சுன்னா நேரா வந்து என்கிட்ட ஆமாம் மீரா நான் அப்படி தான் பிடிச்சு தள்ளிட்டேன், ஏதோ ஒரு கோவத்துல தள்ளிட்டேன், ஆக்ரோஷத்துல தள்ளிட்டேன் மன்னிச்சுடுன்னு கேட்டிருக்கனும் டிராமா பண்ணி வெளியே அனுப்பிட்டேன்னு சொல்லியிருக்கனும். ஏன்னா எனக்கு முன்னாடி உன்னை வெளியே அனுப்பிடுவேன்னு என்கிட்ட சவால் விட்டாரு. அதே மாதிரி வெளியே அனுப்பிட்டாரு. இவ்வாறு கூறியிருக்கிறார் மீரா மிதுன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X