For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உனக்காக நான் இருக்கேன்.. எப்போ வேணா கூப்பிடு.. முகெனுக்காக உருகிய மீரா மிதுன்: கடுப்பான நெட்டிசன்ஸ்!

  |
  Shocking! Meera Mithun Into Politics | Seeman | Meera Mithun

  சென்னை: தந்தையை இழந்த முகெனுக்காக உருகிய மீரா மிதுனை நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர்.

  விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் முகென். மலேசியாவை சேர்ந்த இவர் தனது இயல்பான நடத்தையாலும் நேர்மையான விளையாட்டாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார்.

  குடும்பத்தினர் மீது மிகுந்த பாசமும் அன்பும் கொண்ட முகென், தனது பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டதால் சிறு வயது முதலே அன்புக்காக ஏங்கியதாக தெரிவித்தார். அவரது பிஹேவிங்கிலும் அவர் அன்புக்கு ஏங்குவது நன்றாகவே தெரிந்தது.

  இரங்கல் ஆறுதல்

  இரங்கல் ஆறுதல்

  இந்நிலையில் முகென் ராவின் தந்தையான பிரகாஷ் ராவ் நேற்று முன்தினம் திடீரென மரணமடைந்தார். கார்டியாக் அரஸ்ட்டால் அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களான இயக்குநரும் நடிகருமான சேரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் முகென் ராவின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.

  இறுதிச்சடங்கு

  இறுதிச்சடங்கு

  ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் முகெனுக்கு ஆறுதல் கூறும் வகையில் அவரது தந்தையின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தனர். பிரகாஷ் ராவின் இறுதிச்சடங்கு நேற்று மாலை மலேசியாவில் நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தின் போது சவப்பெட்டியில் எடுத்து செல்லப்பட்ட தனது தந்தையின் உடலை முகென் சுமந்து சென்றார்.

  மீரா மிதுன் ஆறுதல்

  மீரா மிதுன் ஆறுதல்

  இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் சர்ச்சைகளையும் சண்டைகளையும் உருவாக்கிய நடிகை மீரா மிதுன், தந்தையை இழந்து தவிக்கும் முகெனுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். ரொம்பவே உருகி உருகி ஆறுதல் கூறியுள்ளார் மீரா மிதுன்.

  எப்போ வேணா கூப்பிடு

  இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தைரியமாக இரு முகென். ஆன்மிக காரணங்களுக்காக தான் எல்லாமே நடக்கிறது. நான் எப்போதும் உங்களுக்காக இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னை கூப்பிடுங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர் என்று கூறியிருக்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகெனுடன் சேர்ந்து எடுத்த போட்டோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மீரா மிதுன்.

  என்ன அர்த்தம் ?

  மீரா மிதுனின் இந்த டிவிட்டையும் போட்டோவையும் பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளானர். அதே நேரத்தில் சிலர் அவரை பாராட்டியிருக்கின்றனர். ஏன் கன்டென்ட் எதுவும் கிடைக்கவில்லையா, முகென் தந்தை இறந்த விஷயத்தை இப்போது கையில் எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். சிலர் கால் மி எனிடைம்ன்னா என்ன அர்த்தம் என்றும் டபுள் மீனிங்கில் கலாய்த்திருக்கின்றனர்.

  நம்பர் கொடுங்க

  சிலர் நீங்கள் முகெனின் தவறான டிவிட்டர் ஹேன்டிலை குறிப்பிட்டுள்ளீர்கள் என்று சரியான டிவிட்டர் ஐடியை கொடுத்துள்ளனர். இன்னும் சிலர் உங்களின் போன் நம்பரை கொடுங்கள் என்றும் கூறியிருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது முகெனுடன் தான் முதலில் நெருக்கமானார் மீரா மிதுன்.

  குரோவ் அப்

  பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, நீங்க இன்னும் வளரனும் என்று கூறி முகெனை வெறுப்பேற்றினார் மீரா. இதனால் கடுப்பான முகென் பயங்கரமாக கத்தி விமர்சனத்துக்குள்ளனார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தின் போது அவருக்கு உடையெல்லாம் வாங்கி கொடுத்தார் மீரா மிதுன்.

  லீக்கான ஆடியோக்கள்

  லீக்கான ஆடியோக்கள்

  அதோடு பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பாக முகெனுடன் தான் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் மியூசிக் சேர்த்து வெளியிட்டு சோஷியல் மீடியாவில் வைரலாக்க வேண்டும் என்று தனது நண்பர்களிடம் கூறினார் மீரா மிதுன். அவர் பேசிய ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Meera Mithun tweets for Mugen. Mugen's father Prakash rao passed way day before yesterday. For tha meera condoles and netizens slams after seeing her tweet.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X