twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் புகழுக்கு களங்கம்.. சட்டப்படி நடவடிக்கை பாயும்.. மீடியாக்களை எச்சரிக்கும் மீரா மிதுன்!

    |

    Recommended Video

    மீரா மிதுன் அசத்தல் வீடியோ!

    சென்னை: தனது புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என நடிகை மீரா மிதுன் மீடியாக்களை எச்சத்திருக்கிறார்.

    நடிகை மீரா மிதுன் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு இறங்குமுககமாகவே உள்ளது.

    படங்களில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டதால் விரக்தியான அவர் இனி தமிழ் சினிமாவே வேண்டாம் என பாலிவுட்டுக்கு பறந்துவிட்டார். அங்கிருந்து நாள்தோறும் தமிழ் சினிமாவையும் தமிழ் சினிமா பிரபலங்களையும் சாடி அவர் வீடியோ வெளியிட்டுவருகிறார்.

    எப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..! எப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..!

    திருமணம்

    திருமணம்

    இதன் காரணமாக நெட்டிசன்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தனது பெயர் டேமெஜானதை உணர்ந்த மீரா மிதுன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் பரவி வருகிறது.

    வாழ்த்துக்கு நன்றி

    வாழ்த்துக்கு நன்றி

    இதுகுறித்த ரசிகர்களின் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத மீரா, திருமணம் குறித்த ரசிகர்களின் வாழ்த்துக்கு நன்றி கூறியுள்ளார். இதன் மூலம் அவர் திருமணத்திற்கு தயாராகிவிட்டது உறுதி செய்யப்பட்டது.

    மீடியாக்களுக்கு மிரட்டல்

    மீடியாக்களுக்கு மிரட்டல்

    இந்நிலையில் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட மீடியாக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சில ஊடகங்களுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் மீரா மிதுன்.

    நடவடிக்கை பாயும்

    நடவடிக்கை பாயும்

    பல்வேறு நபர்களின் நேர்காணல்களை உங்கள் டிஆர்பிக்காக எனது புகழை பாதித்துள்ளது. ஆறு வருடங்களாக தான் உருவாக்கி வைத்திருந்த பாஸிட்டிவ் இமெஜை கெடுக்கும் ஆபாச லிங்க்களை நீக்க வேண்டும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்று எச்சரித்திருக்கிறார் மீரா மிதுன்.

    பிரதமருக்கு புகார்

    பிரதமருக்கு புகார்

    ஏற்கனவே தனக்கு அநீதி இழைத்த சென்னை போலீஸை கூண்டோடு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் டிவிட்டர் மூலம் புகார் தெரிவித்திருந்தார் மீரா மிதுன். இந்நிலையில் தன்னைப்பற்றி செய்தி வெளியிடும் ஊடகங்களையும் மிரட்டியிருக்கிறார் மீரா மிதுன்.

    English summary
    Meera mithun warns Media for posting her news. She says Medis should remove the links which is obence of her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X