Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அக்னி சிறகுகள் படத்தில் மீரா மிதுனை கமிட் செய்யவே இல்லை.. இயக்குநர் நவீன் அதிரடி!
சென்னை: அக்னி சிறகுகள் படத்தில் இருந்து தன்னை நீக்கிவிட்டார்கள் என மீரா மிதுன் கூறிய நிலையில் அவரை படத்தில் கமிட் செய்யவே இல்லை என இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.
மூடர் கூடம்' நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் படம் 'அக்னி சிறகுகள்'. இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா தயாரிக்கிறார்.
இதில் அக்ஷரா ஹாசன் லீடிங் ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் தான்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகவும் ஆனால் கமல் தனது செல்வாக்கால் தன்னை நீக்கிவிட்டு அக்ஷராஹாசனை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
மீரா கமிட் செய்யப்படவில்லை
இந்நிலையில் மீரா மிதுனின் குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் நவீன் டிவிட்டரில் பதில் தெரிவித்துள்ளார். அதாவது, அக்னிசிறகுகள் படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதில் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். அக்ஷரா தான் ஃபீமேல் லீடிங் ரோல். மீரா மிதுன் படத்தில் முதல் இடத்தில் ஒரு போதும் கமிட் செய்யப்படவே இல்லை.
|
பேச வேண்டாம் என நினைத்தேன்
எனக்கு தெரியாமல் அந்தப்படத்தில் நடிப்பதாக அவரே பிரஸிடம் கூறியுள்ளார். இதுகுறித்து பேசவேண்டாம் என நினைத்தேன்.. ஆனால் இப்போது.. என முடித்திருக்கிறார் நவீன்.
|
ஆம்பளையா இருங்க
இயக்குநர் நவீனின் இந்த டிவிட்டுக்கு பதிலளித்துள்ள மீரா மிதுன், நீங்கள் ஒரு பெரிய பொய்யர். இது நீங்கள் பிரஸுக்கு கொடுத்த இன்டர்வியூ என ஒரு லிங்கை ஷேர் செய்திருக்கிறார். மேலும் ஒரு ஆணாக இருங்கள், உண்மையை பேச தைரியம் வேண்டும். கோழையாக இருக்காதீர்கள். அல்லது செலக்ட்டிவ் அம்னீஷியா உள்ளதா என மனநல மருத்துவரிடம் ஆய்வு செய்து கொள்ளுங்கள். என்னால் ஆதாரங்களை வெளியிட முடியும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் மீரா மிதுன்.
|
அம்பலப்படுத்திடுவேன்
மேலும் நீங்கள் இன்னும் பொய் சொல்லிக் கொண்டிருந்தால் நான் ஏவி ஆதாரங்களையும் வைத்திருக்கிறேன் அவற்றை பிரஸ்க்கு அம்பலப்படுத்திவிடுவேன். மேலும் என்னை இந்த படத்திற்கு உறுதி செய்து உங்களை சந்திக்க செய்த அம்மா கிரியேஷன்ஸின் டி சிவாவுக்கும் தெரியப்படுத்துவேன் என கூறியுள்ளார்.