வழக்குகளுக்கு அஞ்சி.. விஜய் டிவியிடம் கெஞ்சி.. அந்த நடிகை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது இப்படிதானா!

Recommended Video

Bigg Boss Meera Mithun:விஜய் டிவி ஒரு Cheapபான வேலைய பாக்குறாங்க-வீடியோ

சென்னை: நடிகை மீரா மிதுன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் எப்படி பங்கேற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் கடந்த ஜூன் மாதம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியது. இயக்குநர் சேரன், நடிகர் சரவணன், நடிகைகள் வனிதா, ரேஷ்மா, செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு என 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முகென் ராவ் தேர்வு செய்யப்பட்டார்.

15 போட்டியாளர்கள்

15 போட்டியாளர்கள்

அவருக்கு பிக்பாஸ் ட்ரோஃபியும் 50 லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி தொடங்கிய போது 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்கள் கழித்து மாடலான மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் தொடங்கியது முதலே பிக்பாஸ் வீட்டிற்குள் பிரச்சனைதான். சக போட்டியாளர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

இதற்கெல்லாம் மேலாக இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டார் என்று கூறி பரப்பை கிளப்பினார். இதனால் கடுப்பான மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் புறக்கணித்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு பல சர்ச்சை வீடியோக்களை வெளியிட்ட மீரா மிதுன், விஜய் டிவி தனக்கு பேமென்ட் கொடுக்கவில்லை என்று கூறியும், தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்தார்.

பிரஸ் மீட்

பிரஸ் மீட்

பின்னர் நடைபெற்ற பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு மீரா மிதுனை விஜய் டிவி நிர்வாகம் அழைக்கவில்லை. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அவர், பிரஸ் மீட் வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக விஜய் டிவி தனக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என்று கூறியும் வழக்குத் தொடரப்படும் என்று கூறியும் எச்சரித்தார்.

விஜய் டிவியிடம் கெஞ்சி

விஜய் டிவியிடம் கெஞ்சி

இந்நிலையில் தொழிலதிபர் ஜோ மைக்கெல் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் மீரா மிதுன் விஜய் டிவியிடம் கெஞ்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறியுள்ளார்.

கெஞ்சிய மீரா மிதுன்

கெஞ்சிய மீரா மிதுன்

தன் மீது எராளமான மோசடி வழக்குகள் உள்ளதாலும் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டியும் மீரா மிதுன் விஜய் டிவியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்குமாறு கெஞ்சியிருக்கிறார்.

தனியாக சென்றார்

தனியாக சென்றார்

நீங்க எவ்வளவு கொடுத்தாலும் பரவாயில்லை, என்னை அனுப்பினால் மட்டும் போதும் என கூறி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார் மீரா மிதுன். இதனால்தான் அவர் மட்டும் தனியாக சென்றார் என்றும் கூறியிருக்கிறார் ஜோ மைக்கேல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X