Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் பொட்டு.. வகுட்டில் குங்குமம்.. தீயாய் பரவும் மீரா மிதுனின் போட்டோ!
சென்னை: சர்ச்சை நடிகையான மீரா மிதுன் கழுத்தில் புதிய தாலி, வகுட்டில் குங்குமம் என இருக்கும போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர் மீரா மிதுன். மாடலான இவர் 2016ஆம் ஆண்டிற்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை பெற்றார்.
ஆனால் திருமணத்தை மறைத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் திருமணம் நடந்ததை மறைத்ததாகவும் கூறி அவர் வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் திரும்பப் பெறப்பட்டது.
பிக்பாஸ் சீசன் 3
அதன் பிறகு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த மீரா மிதுன், டேமேஜான பெயரை மீண்டும் சரி செய்யவும் சினிமா வாய்ப்பு பெறவும் நினைத்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆரம்பத்தில் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் கார்னர் செய்ததால் அவர் மீது மக்களுக்கு பரிதாபம் ஏற்பட்டது.
வாய்ப்பு இல்லை
ஆனால் எப்போது இயக்குநர் சேரன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறினாரோ அப்போதே மக்களின் கோபத்திற்கு ஆளானார். இதனை தொடர்ந்து வெளியே வந்த அவர் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
கொஞ்ச நஞ்ச பெயர்
ஏற்கனவே நடித்திருந்த நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டன. அதன்பிறகு எந்தப் படத்திலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுத்துக் கொண்டார் மீரா மிதுன்.
விரைவில் திருமணம்
சமூக வலைதளங்களிலும் அவரது பெயர் ரொம்பவே கெட்டுபோய் விமர்சனத்துக்குள்ளானது. இதனால் டேமேஜ்ஜான தனது பெயரை மீட்டெடுக்க திருமணம் செய்து கொள்ள போவதாய் அறிவித்தார். விரைவில் திருமணம் என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். இதனால் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து கூறினர்.
லீக்கான அந்தரங்க ஆடியோ
இதனிடையே அவர் தனது ஆண் நண்பரிடம் போனில் பல அந்தரங்க விஷயங்களை பேசினார். அந்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனால் அவர் காதல் உறவில் இருப்பது உறுதியானது. ஆனாலும் அவரது காதலர் யார் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
|
கழுத்தில் தாலி
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் கழுத்தில் புத்தம் புது தாலியுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். நெற்றியில் பொட்டு, வகுட்டில் குங்குமன் என புதுமணப் பெண்ணை போல் காட்சியளிக்கிறார். மீரா மிதுனின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
கெட்டப் அப்
ஆனால் இந்த போட்டோவுக்கு வொய்ப் ஆஃப் மிஸ்டர் ஆக்டர் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அதோடு #shooting #inprogress #movie #padam #heroine #hero #wife என்ற ஹேஷ்டேக்குகளையும் டேக் செய்திருக்கிறார். இதனால் இந்த கெட்ட அப் ஏதோ படத்திற்கானது என உறுதியாகியுள்ளது.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்