twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாப்பாடு தரவில்லை… போலீசார் அராஜகம் செய்கிறார்கள்… மீரா மிதுன் கூச்சல் !

    |

    சென்னை : கேரளாவில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் சென்னை ஆணையர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    போலீசார் அவரை அழைத்து வந்த போது, செய்தியாளர்களின் கூட்டத்தை பார்த்த மீரா மிதுன், எனக்கு 24 மணி நேரமா சாப்பாடு தரவில்லை, போலீஸ் அராஜகம் செய்கிறார்கள் என்று கூச்சலிட்டபடி சென்றார்.

    ஹேட்ஃபுல் பேச்சுக்கு எண்ட் கார்ட் போட்டாச்சு.. மீரா மிதுன் கைது.. சந்தோஷத்தில் சனம் ஷெட்டி!ஹேட்ஃபுல் பேச்சுக்கு எண்ட் கார்ட் போட்டாச்சு.. மீரா மிதுன் கைது.. சந்தோஷத்தில் சனம் ஷெட்டி!

    பின்னர் மாஜிஸ்ட்ரேட் இல்லத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

    மீரா மிதுன்

    மீரா மிதுன்

    மீரா மிதுன் என்றாலே சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் என்று எல்லோருக்கும் தெரியும். சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிடும் பதிவுகளும் சில சமயம் சர்ச்சை ஆவதுண்டு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சேரன் தன்னை தகாத முறையில் தொட்டார் என பொய் புகார் கொடுத்த அவரை நெட்டிசன்கள் அப்போது இருந்தே ட்ரோல் செய்து வருகின்றனர்.

    ட்விட்டர் கணக்கு நீக்கம்

    ட்விட்டர் கணக்கு நீக்கம்

    மீரா எல்லைமீறி பதிவுகள் போட்டு வந்த நிலையில் அவரது ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் இருக்கும் மீரா மிதுன் அவர் போடும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட் செய்ய முடியாத வகையில் தான் வைத்திருந்தார்.

    மற்ற நடிகைகளை சீண்டினார்

    மற்ற நடிகைகளை சீண்டினார்

    தன்னை தானே ஒரு சூப்பர்மாடல் என கூறிக்கொள்ளும் மீரா மிதுன் மற்ற நடிகைகள் தனது முகம் போல பிளாஸ்டிக் சார்ஜரி செய்து மாற்றுகிறார்கள் என குற்றம்சாட்டி இருந்தார். விஜய், சூர்யா என பல டாப் ஹீரோக்களை கூட சீண்டி பார்த்துவிட்டார் மீரா, ஆனால் யாரும் அவரை ஒரு பொருட்டாக கூட கண்டுகொள்ளவில்லை.

    அவதூறு கருதது

    அவதூறு கருதது

    சமீபத்தில், பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனையடுத்து நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    தலைமறைவு

    தலைமறைவு

    இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த 11 ஆம் தேதி நடிகை மீரா மிதுன் ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், நடிகை மீரா மிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமலும், அதற்கு உரிய விளக்கத்தை அளிக்காமலும் தலைமறைவாக இருந்து வந்தார். அதேவேளையில் என்னை கைது செய்ய முடியாது என்று மீரா மிதுன் போலீசாருக்கு சவால் விட்டிருந்தார்.

    கேரளாவில் கைது

    கேரளாவில் கைது

    இந்த நிலையில், நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் வைத்து கைது செய்துள்ளனர். நடிகை மீரா மிதுனை கைது செய்ய போலீசார் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்ற போது, அங்கு போலீசாரை கைது செய்ய விடாமல் மீரா மிதுன் தகராறில் ஈடுபட்டார். மேலும், அங்கு நடந்த சம்பவத்தை மீரா மிதுன் தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

    போலீஸ்னா அராஜகம் பன்னுவீங்களா?

    போலீஸ்னா அராஜகம் பன்னுவீங்களா?

    இந்த ஆண்கள் எல்லோரும் என்னை துன்புறுத்துகின்றனர். முதல்-அமைச்சர் அவர்களே ஒரு பொண்ணுக்கு இப்படி தான் நடக்கனுமா? ஒரு பொண்ணுக்கு நிஜமாகவே இப்படி தான் நடக்கனுமா? எல்லோரையும் வெளியே போக சொல்லுங்க.. போலீஸ்னா அராஜகம் பன்னுவீங்களா? என் ஃபோன தர முடியாது, என் மேல யாராவது கைவைச்சா கத்தியில குத்திக்கிட்டு செத்துருவேன்,எல்லாரையும் வெளியில போக சொல்லுங்க, முதல்-அமைச்சர் அவர்களே, பிரதமர் மோடி அவர்களே, இந்த தமிழ்நாடு போலீஸ் என்ன ரொம்ப டார்ச்சர் பன்றாங்க என்று கத்தியபடி கதறி அழுதார்.

    24 மணி நேரமா சாப்பாடு தரவில்லை

    24 மணி நேரமா சாப்பாடு தரவில்லை

    கைது செய்யப்பட்ட மீரா மிதுனை பெண் போலீசார் உதவியுட ன் சென்னை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலத்தில் சைபர் க்ரைம் பிரிவில் வைத்து விசாரணை நடத்துவதற்காக அழைத்து வந்தார்கள். அழைத்து வரும் போதே செய்தியாளர்களின் கூட்டத்தை பார்த்த மீரா மிதுன், எனக்கு 24 மணி நேரமா சாப்பாடு தரவில்லை, போலீஸ் அராஜகம் செய்கிறது, நான் கொடுத்த புகார் மீது 3 வருடமாக எந்த கிரிமினல் மீதும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூச்சலிட்டுக்கொண்டே சென்றார். இதைடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடித்தப்பட உள்ளது. இதன் பிறகு அவரிடம் உரிய விசாரணை நடத்தப்பட்ட பின்னர் மாஜிஸ்ட்ரேட் இல்லத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். மீரா மிதுன், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட உள்ளார். இதற்கு ஜாமீன் நீதிமன்றத்தில் தான் கிடைக்கும். அதனால் அவர் மாதக்கணக்கில் சிறையில் இருக்க வாய்ப்புண்டு என்கிறது போலீஸ் தரப்பு.

    English summary
    Tamil actress Meera Mitun, who was earlier booked for her reported casteist remarks on social media, has been arrested by the Cyber Crime Wing of Tamil Nadu Police from Kerala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X