அப்பவே அப்படி.. பிக்பாஸ் வீட்டிலேயே கொரோனா அட்வைஸ் சொன்ன மீரா மிதுன்.. வைரலாகும் வீடியோ!
சென்னை: பிக்பாஸ் வீட்டிலேயே மீரா மிதுன், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளார் என வைரலாகும் வீடியோவை மீரா மிதுன் ஷேர் செய்துள்ளார்.
மாடல் அழகியான மீரா மிதுன், உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.
சர்ச்சை மற்றும் கவர்ச்சிக்கு பெயர் போன மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு செம ஹாட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
ஒரே போட்டோ
ஒரு டிரெஸ்சில் செம செக்ஸியாக போட்டோஷூட் நடத்தி விட்டால், அந்த புகைப்படத்தையே ஒரு வார காலம் வித விதமாக போஸ்ட் போட்டு, ரசிகர்களை டென்ஷன் ஆக்கி விடுவார் மீரா மிதுன். கடந்த மூன்று நாட்களாக ப்ளு கலர் பிகினி மற்றும் காக்கி நிற ஓவர் கோட் அணிந்த புகைப்படத்தையே போட்டு வருகிறார்.
பாலிவுட்டுக்கு போறாங்களாம்
மீண்டும் அதே உடையில் இருக்கும் வித்தியாசமான போஸ் போட்டோவை போட்ட மீரா மிதுன், பாலிவுட் ஜர்னி என்றும், கனவு காண்பவள் என்றும் பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த போஸ்ட்டுக்கு கீழே இருக்கும் கமெண்ட்டுகளை படிக்கவே முடியாத அளவுக்கு நெட்டிசன்கள், அவ்வளவு ஆபாசமாகவும் பச்சையாகவும் திட்டி உள்ளனர்.
கொரோனா விழிப்புணர்வு
இந்நிலையில், மூன்றாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில், போலீஸ் உடை அணிந்து, மீரா மிதுன் பேசும் வசனங்கள், அப்படியே கொரோனா வைரஸ் பராவாமல் தடுக்க கூறும் விழிப்புணர்வு வசங்களாக இருப்பதை ரசிகர்கள் சிலர் எடிட் செய்து வைரலாக்கி உள்ளனர். அதனை மீரா மிதுன் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு நல்ல கிரியேட்டிவிட்டி என பாராட்டி உள்ளார்.

யாரையும் தொடாதே
அந்த வீடியோவில், மீரா மிதுன், காவல் அதிகாரி உடையை அணிந்து கொண்டு, முகேன் ராவ், லாஸ்லியா, கவின் உள்ளிட்ட பிக்பாஸ் போட்டியாளர்களை, யாரும் யாரையும் தொடக்கூடாது. தள்ளித் தள்ளி உட்காருங்க, தொட்டா அவ்வளவு தான் என சோஷியல் டிஸ்டன்ஸ் குறித்து பேசியுள்ளது தற்போது, உள்ள சூழ்நிலைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











