“நான் ப்யூர் தமிழ்ப்பொண்ணுங்க..” பீர் குடித்தபடியே லைவ்வில் பேசிய பிக் பாஸ் மீரா.. வைரலாகும் வீடியோ!

மீரா மிதுனின் புதிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Meera With Beer Glass : போதையில் இருக்கும் மீரா- வீடியோ

சென்னை: பீர் குடித்துக்கொண்டே தான் ஒரு தமிழ் பெண் தான் நடிகை மீரா மிதுன் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.

சர்ச்சை ராணி மீரா மிதுன் இப்போதெல்லாம் எதை செய்தாலும் அது வைரலாகிவிடுகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் லேட்டாக நுழைந்தாலும், அதிரடி கிளப்பினார் மீரா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக சண்டை சச்சரவுகளை கூட்டினார்.

எல்லோர் மீதும் பழிபோட்டார். கடைசியாக சேரன் தலையில் கையை வைத்ததும் 5வது வாரமே கல்தா கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார் மீரா.

சேரனுடன் பிரச்சினை:

சேரனுடன் பிரச்சினை:

ஆனால் அப்போதும் அவர் அடங்கியதாக தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசும் போதெல்லாம் சேரனை வசைபாடியே வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த சேரனின் மனைவி, மீரா கன்னத்தில் பெளேர் என அறைந்ததாகக் கூட ஒரு தகவல் வெளிவானது. ஆனால் இது எது பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

டான்ஸ் வீடியோ:

சமீபத்தில்கூட பப்பில் அரைகுறை ஆடையுடன் மீரா, ஆண் நண்பர் ஒருவருடன் ஆடிய டான்ஸ் வீடியோ வைரலானது. அதோடு, அவர் சிகரெட் குடிக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் பரவியது. இது நடந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் மீராவின் மற்றொரு வீடியோ வைரலாகியுள்ளது.

பீர் வீடியோ:

பீர் வீடியோ:

அதில் பீர் குடித்துக்கொண்டே ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நண்பர் மூலம் சமூகவலைதளத்தில் லைவ்வாக பதில் அளிக்கிறார் மீரா. அப்போது அவர் "தனக்கு மிகவும் பிடித்தது பீர் தான் எனவும், அதனால் அதை நிறைய குடிப்பேன். அது வெறும் பார்லி கஞ்சி தான். உடம்புக்கு மிகவும் நல்லது" எனக் கூறுகிறார்.

பார்லி கஞ்சி:

பார்லி கஞ்சி:

மீராவின் இந்தப் பதிலைக் கேட்டு, ‘பீர் குடித்தால் தொப்பை விழுந்து விடும்' என ரசிகர் ஒருவர் அக்கறையாய் பதிவு ஒன்றை வெளியிடுகிறார். அதற்கு மீரா, ‘தான் நிறைய பீர் குடிப்பதாகவும், ஆனால் தனக்கு தொப்பை இல்லை என்றும் கூறுகிறார். அதோடு, தொப்பை போடாமல் இருக்க, தினமும் யோகா உள்பட நிறைய உடற்பயிற்சி செய்வதாக அவர் தெரிவிக்கிறார்.

தமிழ்ப் பெண்:

தமிழ்ப் பெண்:

தமிழ் பெண்ணாக இருந்து கொண்டு இப்படி பீர் குடிக்கிறீர்களே என கேட்கப்பட்ட கேள்விக்கு, "எதற்கெடுத்தாலும் தமிழ்ப் பெண் என்று கூறாதீர்கள். பீர் குடிப்பதற்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது. நானும் தமிழ் பெண் தான். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன்.

கெடுதல் இல்லை:

கெடுதல் இல்லை:

மேலும் பீர் ஒன்றும் கெடுதல் கிடையாது. இது பார்லியில் இருந்து செய்யப்படுகிறது. பீர் குடிப்பதால் எதுவும் ஆகாது", என பதிலளிக்கிறார் அவர். மறக்காமல் இந்த லைவ்விலும் சேரன் மீது தப்பிருப்பதாகவே அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X