ஜெயலலிதா ரோலில் நடிக்க நீங்க யாரு.. நடிகை கங்கனா ரனாவத்தை சீண்டும் பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக கொந்தளித்து உங்களின் பிரபலத்தை வீணடித்து விட்டீர்கள் என்றும், ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடிக்க நீங்க யாரு என்றும் காரசாரமான கேள்விகளை முன் வைத்துள்ளார் மீரா மிதுன்.
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.
கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வந்த அவர், சமீப காலமாக அரசியல் ரீதியான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.

கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்
பவர்ஸ்டாருக்கு இருக்கும் ரசிகர்களை போல, மீரா மிதுனை பின் தொடரும் ரசிகர்கள் அவரை பங்கமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர். சூப்பர் மாடல் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டு சமூக வலைதளத்தில் அவர் செய்யும் அலம்பல் வேற லெவல். ஆபாசமான புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வந்த அவர், அடிக்கடி இது போன்ற சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.

என்னை முதல்வர் ஆக்குங்கள்
சமீபத்தில் தமிழ்நாடு அரசு குறித்தும் ஆட்சி குறித்தும் விமர்சித்து இருந்த நடிகை மீரா மிதுன், தனது படிப்பு சான்றிதழ்களை பதிவிட்டு, தான் தகுதியான ஆள் என்றும், தன்னை முதல்வராக்கி நாற்காலியில் உட்கார வையுங்கள், தமிழ்நாட்டை தலை கீழாக மாற்றி காட்டுகிறேன் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

சல்மான் கானுக்கு சப்போர்ட்
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் பாலிவுட் முதல் இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் கரண் ஜோஹர் மற்றும் சல்மான் கான் தான் காரணம் என கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு ஆதரவாக இவர் சில ட்வீட்களை போட்டு, நெட்டிசன்களிடம் நன்றாகவே வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இழந்து விட்டீர்கள்
இந்நிலையில், தற்போது நடிகை கங்கனா ரனாவத் பக்கம் திரும்பியுள்ளார் இந்த சூப்பர் மாடல் மீரா மிதுன். உங்களுடைய பிரபல தன்மையை சுஷாந்த் சிங் மரண விசயத்தில் தேவையில்லாமல் பேசி விரயம் செய்து விட்டீர்கள், நெப்போடிசம் சினிமா உலகில் பரவி இருந்தாலும், அதில் இருந்து மீண்டு வந்து தன்னைப் போல சாதித்திருக்க வேண்டும் சுஷாந்த் எனவும் பதிவிட்டு ரசிகர்களின் கோபத்தை கிளறி இருக்கிறார்.

அதுக்கு உங்களுக்கு தகுதியில்லை
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பயோபிக்கில் எப்படி நீங்க நடிக்கலாம். உங்களுக்கு என்ன தகுதி இருக்கு, கோலிவுட்டில் நிலவும் அரசியல் காரணமாக உங்களை இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க வைத்து, பெரிய தவறு செய்து வருகின்றனர். மக்களின் அன்பை பெற்ற இரும்பு பெண்மணி ஜெயலலிதாவாக நடிக்க துளியும் அருகதை அற்றவர் நீங்கள் என விளாசி கங்கனா ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் மீரா மிதுன்.


Click it and Unblock the Notifications











