Just In
- 5 min ago
காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!
- 30 min ago
கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing
- 38 min ago
லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 59 min ago
பாலா ஏன் பின்னாடி நிக்கிறாரு? டிடியுடன் ஆரி முதல் ஷிவானி வரை.. களைகட்டிய பிக் பாஸ் கொண்டாட்டம்!
Don't Miss!
- Sports
ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்? பின்னணி
- News
பழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு
- Lifestyle
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- Automobiles
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- Finance
4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆபாச வெப்சைட்டில் போட்டோ.. போன் நம்பரும் போட்டுருக்காங்க.. புகார் கொடுக்காம இப்படி பண்ணலாமா மீரா?
சென்னை: பிக்பாஸ் புகழ் மீரா மிதுனின் மார்ஃப் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை ஆபாச வெப்சைட்டில் சில விஷமிகள் பரப்பி வருவதாக மீரா மிதுன் புகார் தெரிவித்துள்ளார்.
மாடல் அழகியாக வலம் வந்த மீரா மிதுன், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தனது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
'எனக்குப் போட்டியே அந்த முன்னாள் நடிகையின் மகள்தான்...' அதிரடியாக ஒப்புக்கொண்ட இளம் ஹீரோயின்!
|
விஜய் காப்பி
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற வேளையில், நடிகர் விஜய், வாயில் விரல் வைத்து உஷ் என சொல்வது, தன்னைப் பார்த்துத் தான் காப்பி அடித்து பண்ணதாக சர்ச்சையை கிளப்பி, தளபதி ரசிகர்கள் மத்தியில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். ஏற்கனவே கியாரா அத்வானியும் தன்னுடைய போஸ்களை காப்பி செய்வதாக சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

நிர்வாண போட்டோ
இந்நிலையில், தனது புகைப்படங்களை மார்ஃப் செய்து நிர்வாண போட்டோக்களாக மாற்றி, சில ஆபாச வெப்சைட்டுகளில் சில விஷமிகள் பகிர்ந்துள்ளதாகவும், சைபர் கிரைம் இதனை தடுக்காமல் என்ன செய்கிறது என்றும் மாடல் அழகி மீரா மிதுன், தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

போன் நம்பர்
மேலும், அதில், தனது போன் நம்பரும் அந்த வெப்சைட்டில் பகிரப்பட்டுள்ளதாக மீரா மிதுன் தெரிவித்துள்ளார். மிகவும் செக்ஸியான போட்டோஷூட்களை நடத்தி பதிவிட்டு வரும் மீரா மிதுனை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில், மீரா மிதுனின் இந்த பதிவையும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

மோடிக்கு டேக்
தமிழ்நாட்டு சைபர் கிரைம் இதுபோன்ற விஷயங்களை தடுக்க தவறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மீரா மிதுன், தனது ட்வீட்டில், பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இது சீப் பப்ளிசிட்டி என்றும், வெட்கமே இல்லையா என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

புகார் கொடுங்க
மேலும், சிலர் இப்படி ட்விட்டரில் பதிவு போடுவதை நிறுத்தி விட்டு, போலீஸில் இதுகுறித்து புகார் கொடுங்க, உங்க பிரச்சனையை சீக்கிரமே அவங்க சால்வ் பண்ணி வைப்பாங்க, வெறும் லைக்குக்காகவும், கமெண்ட்டுக்காகவும் இதுபோன்ற பதிவுகளை போடாதீங்க என்றும் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.