ஐபிஎல் திருவிழா.. கையில் பந்துடன் துபாயில் காத்திருக்கும் நடிகை.. எல்லோ ஆர்மிக்கு சப்போர்ட்டாம்!
சென்னை: ஐபிஎல் ஆர்ப்பாட்டம் தொடங்கும் நிலையில், பிரபல ஹீரோயின் துபாயில் இருந்தபடி, கையில் பந்துடன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Recommended Video
கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் ஆவலோடு எதிர்பார்க்கும் தொடர், ஐபிஎல் திருவிழா.
கொரோனா காரணமாக, நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்கவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

தோனி, ரோகித் சர்மா
இந்த ஆர்ப்பாட்ட ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. ஐபிஎல் 13வது தொடரான இதன் முதல் போட்டியில் தோனி தலைமை சிஎஸ்கே அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

நடிகை மீரா நந்தன்
இந்நிலையில் தமிழ் நடிகை ஒருவர், இந்தப் போட்டியின் அப்டேட்டை வழங்கக் காத்திருக்கிறார். அவர் நடிகை மீரா நந்தன். தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம், சூரியநகரம் உட்பட சில படங்களில் நடித்தவர் இவர். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். சில சீரியல்களிலும் நடித்து வந்தார்.

ரேடியோ ஜாக்கி
கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு கோல்ட் காய்ன் என்ற படத்தில் நடித்திருந்த அவர், அதற்கு பிறகு நடிக்கவில்லை. நடிப்பை விட்டுவிட்டு, துபாயில் ஒளிபரப்பாகும் மலையாள எஃப் எம் ஒன்றில், ரேடியோ ஜாக்கியாகப் பணியாற்றி வருகிறார். அங்கிருந்தபடி அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ஹோம்லி லுக்
கடந்த சில மாதங்களுக்கு முன், குறைந்த அளவு ஆடை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போட்டோஸ் வைரலானது. இதற்கு ரசிகர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். உங்களை ஹோம்லி லுக்கில் பார்க்கவே ஆசைப்படுகிறோம். இந்த மாதிரி டிரெஸ் உங்களுக்கு வேண்டாம்' என்று கூறியிருந்தனர்.

ஆடையின் அளவு
இதற்கு பதிலளித்த மீரா நந்தன், என் ஆடையின் அளவைக் கணக்கிட யாருக்கும் உரிமை இல்லை. அது என் விருப்பம். நான் எதை அணிய வேண்டும் என்றும் கட்டாயப்படுத்த முடியாது' என்று காட்டமாகக் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது கையில் பந்து, தலையில் தொப்பியுடன் தரையில் அமர்ந்தபடி போட்டோ பதிவிட்டுள்ளார்.

அப்டேட்டுக்கு மறந்துடாதீங்க
அதில், ஐபிஎல் அப்டேட்டுக்கு மறந்துடாதீங்க. கோல்ட் எப்.எம்மை கேளுங்க, உங்களுக்கு பிடிச்ச ஐபிஎல் அணியை கமென்ட்ஸ் செக்ஷன்ல குறிப்பிடுங்க. எனக்குப் பிடித்தது சிஎஸ்கே. எல்லோ ஆர்மிக்கு தான் ஆதரவு தரப்போறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலர், மும்பை இண்டியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட தங்களுக்கு பிடித்த அணியை குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











