சினிமாவுக்கு முழுக்கு..துபாயில் வேலை பார்க்கும் தமிழ் ஹீரோயின்..மாடர்ன் லுக்கில் ரணகள போட்டோஷூட்!

By

சென்னை: சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு துபாயில் வேலை பார்க்கும் பிரபல ஹீரோயின், மாடர்ன் லுக்கில் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

V-CONNECT | ACTRESS KOMAL SHARMA CHAT | என்னோட VOICE அப்பிடித்தான் | FILMIBEAT TAMIL

தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம், சூரியநகரம் உட்பட சில படங்களில் நடித்தவர் மீரா நந்தன்.

மலையாள நடிகை இவர், மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். சில சீரியல்களிலும் நடித்துவந்தார்.

துபாயில் ரேடியோ ஜாக்கி

துபாயில் ரேடியோ ஜாக்கி

கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு கோல்ட் காய்ன் என்ற படத்தில் நடித்திருந்த அவர், அதற்குப் பிறகு நடிக்கவில்லை. நடிப்பை விட்டுவிட்டு, துபாயில் ஒளிபரப்பாகும் மலையாள எஃப் எம் ஒன்றில், ரேடியோ ஜாக்கியாகப் பணியாற்றி வருகிறார், கடந்த சில வருடங்களாக. சமீபத்தில் இவர் குறைந்த அளவு ஆடை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போட்டோஸ் வைரலானது.

உங்களுக்கு வேண்டாம்

உங்களுக்கு வேண்டாம்

இதற்கு ரசிகர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். உங்களை ஹோம்லி லுக்கில் பார்க்கவே ஆசைப்படுகிறோம். அதுதான் உங்களுக்கு சரியானது, இந்த மாதிரி டிரெஸ் உங்களுக்கு வேண்டாம் என்று கூறியிருந்தனர். இதற்குப் பதிலளித்த மீரா நந்தன், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போது, வெளியில் யாரையாவது சந்தித்தால் படங்கள் பற்றி விசாரிப்பார்கள்.

குட்டை பாவாடை

குட்டை பாவாடை

இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லாவற்றுக்கும் இன்ஸ்டாவில் வந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். நான் குட்டை பாவாடை அணிந்திருப்பதாக யாரும் குறை கூற முடியாது. என் ஆடையின் அளவைக் கணக்கிட யாருக்கும் உரிமை இல்லை. அது என் விரும்பம், நான் எதை அணிய வேண்டும் என்றும் கட்டாயப்படுத்த முடியாது' என்றும் காட்டமாகக் கூறியிருந்தார்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

இந்நிலையில், இப்போது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதிலும் அவர் மாடர்ன் லுக்கில் இருக்கிறார். துபாய் பாலைவனத்தில் இந்த போட்டோஷூட்டை நடத்தி உள்ளார். அழகாக இருக்கும் இந்தப் புகைப்படங்களை நடிகை அனு இம்மானுவேல், பாடகி மஞ்சரி உள்ளிட்ட பலர் பாராட்டி உள்ளனர்.

ஒன்னும் சொல்றதுக்கில்ல

ஒன்னும் சொல்றதுக்கில்ல

ஏற்கனவே குறை சொல்லி இருந்த ரசிகர்களுக்கு பதில் சொல்வது போல இப்போதும் மாடர்ன் லுக் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிலர் இதற்கும் கிண்டலாகப் பதிவிட்டுள்ளனர். துபாய் போனதும் கேரள ஸ்டைலை மறந்துட்டீங்க அப்படித்தானே? என்றும் ஒன்னும் சொல்றதுக்கில்ல என்றும் சிலர் கூறியுள்ளனர். பலர் பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X