தர்ஷன், முகென்.. அடுத்து கவினுக்கு ஸ்கெட்ச் போடும் மீரா.. வெச்சு செய்ய காத்திருக்கும் கவிலியா ஆர்மி!

மீரா மிதுன் குறித்து ஜோ மைக்கேல் மீண்டும் ஓரு பேட்டி அளித்துள்ளார். அதில் மீராவின் அடுத்த டார்கெட் கவின் தான் என அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: மீரா மிதுனின் அடுத்த டார்கெட் கவின் தான் என பிரபல மாடல் கோஆர்டினேட்டர் ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார்.

மீரா மிதுனை சுற்றி தொடர்ந்து ஏதாவது சர்ச்சைகள் உருவாகிக்கொண்டே தான் இருக்கின்றன. அதில் பாதி மீரா மிதுனின் பேச்சால் உருவாகிறது என்றால், மீதி ஜோ மைக்கேல் தரும் பேட்டிகளால் தான் ஏற்படுகிறது.

பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாகவே இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் தெரிவித்தனர். ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்தனர். பிக் பாஸ் வீட்டில் வைத்து, மீரா கைது செய்யப்படுவார் என ஜோ மைக்கேல் அளித்த பேட்டி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீராவின் புகார்

மீராவின் புகார்

தற்போது மீரா பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரை பற்றியும் புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். அதோடு இனி மும்பையிலேயே செட்டிலாகிவிடப்போவதாக அவர் கூறி வருகிறார்.

அடுத்த டார்கெட்

அடுத்த டார்கெட்

இந்த சூழ்நிலையில் மீரா மிதுன் குறித்து ஜோ மைக்கேல் மீண்டும் ஓரு பேட்டி அளித்துள்ளார். அதில் மீராவின் அடுத்த டார்கெட் கவின் தான் என அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீரா வீடியோ

மீரா வீடியோ

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் தர்ஷன், முகென், கவின் மற்றும் சாண்டி என நான்கு பேருமே தன் பின்னால் தான் சுற்றிக்கொண்டிருந்தனர் என மீரா சமீபத்திய வீடியோ ஒன்றில் கூறியிருந்தார். அதோடு தர்ஷன் மற்றும் முகென் மீது அவர் காதல் புகாரும் தெரிவித்திருந்தார்.

ஃபேன் பேக்

ஃபேன் பேக்

இந்த சூழ்நிலையில் ஜோவின் பேட்டியை வைத்து பார்க்கும் போது, அவரது அடுத்த டார்கெட் கவின் தான் என தெரிகிறது. இதற்காக அவர் கவின், லாஸ்லியா மாதிரி, கவின், மீரா என்ற பெயரில் ரசிகர் பக்கம் ஒன்றை சமூக வலைதளங்களில் ஆரம்பித்து இருப்பதாக ஜோ மைக்கேல் கூறியுள்ளார்.

கவின் ரசிகர்கள்

கவின் ரசிகர்கள்

கவினுக்கு சமூக வலைதளப் பக்கங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். எனவே அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவே மீரா இதுபோல் நடந்துகொள்வதாக ஜோ கூறியுள்ளார்.

கவின் ஆர்மி

கவின் ஆர்மி

ஒருவேளை ஜோ சொல்வது போல் மீரா கவினை டார்கெட் செய்தால், கவின் ஆர்மி சும்மா இருக்காது. எனவே கூடிய சீக்கிரம் ஒரு பிரச்சினை கன்பார்ம் என்றே தெரிகிறது.

கவின் மீதான சர்ச்சைகள்

கவின் மீதான சர்ச்சைகள்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கவின் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். லாஸ்லியா, சாக்ஷி முக்கோண காதல், சேரனுடன் சண்டை உள்ளிட்ட விஷயங்கள் கவினுக்கு எதிராக திரும்பின. ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு, தான் உண்டு தன் வேலை உண்டு என கவின் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X