ஆடையே இல்லாமல் படுக்கையில்.. மன்னிப்பு கேட்ட மோகன்லால்.. பல விருதுக்கு பின்னால் இருக்கும் சங்கடம்!
சென்னை: சமுத்திரக்கனி இயக்கிய உன்னைச் சரணடைந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மீரா வாசுதேவன், அதன் பின் அஅறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், குமரி பெண்ணின் உள்ளத்திலேயே உள்ளிட்ட தமிழ் படத்தில் நடித்துள்ளார். அண்மையில் இவர் தனது 3வது கணவரை விட்டு பிரிந்தார், இவர்கள் பிரிவுக்கான காரணம் என்ன என்று தெரியாத நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், விவாகரத்து குறித்து பேசாமல், மோகன்லாலுடன் தன்மாத்ரா படத்தில் நடித்தது குறித்து பேசி உள்ளார்.
2005 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் தான் 'தன்மாத்ரா' பத்மராஜனின் "ஓர்மா" சிறுகதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. மோகன்லால், அர்ஜுன் லால், நெடுமுடி வேணு, ஜகதி ஸ்ரீகுமார், மீரா வாசுதேவன், பிரதாப் போத்தன் ஆகியோர் நடத்த இந்த படத்தை பிளெஸ்ஸி எழுதி இயக்கி இருந்தார். ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுவதால், அவரின் வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பது தான் படத்தின் கதை. இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 150 நாட்கள் ஓடிய, மூன்று மடங்கு வசூல் குவித்தது. அதுமட்டுமில்லாமல், தன்மாத்ரா திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட ஐந்து கேரள அரசின் திரைப்பட விருதுகளை வென்றது. மேலும், 53 வது தேசிய திரைப்பட விருதில், சிறந்த மலையாள திரைப்படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டு விருதை அள்ளியது.
தன்மாத்ரா சாதனை படைத்த படம்: தன்மாத்ரா படத்தில் மோகன்லானின் மனைவியாக மீரா வாசுதேவன் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்தது குறித்து அவர், ரெட் கார்பெட் ஷோவில் பேசி உள்ளார். அதில், அந்த படத்தில் படுக்கை அறை காட்சி ஒன்று வரும், அதில் மோகன்லால் உண்மையிலேயே ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்தார். அந்த காட்சி குறித்து இயக்குநர் என்னிடம் சொன்னதும், இந்த காட்சி காட்டாயம் வேண்டுமா என்று கேட்டேன். அப்போது அவர், இந்த படத்தில் கணவன், மனைவி இருவரும் ரொம்ப அன்பானவர்கள், தாம்பத்தியத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அப்படி இருக்கும் கணவர், படுக்கையில் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும்போது சுவரில் பல்லி இருப்பதை பார்த்துவிட்டு திடீரென எழுந்து என்று பல்லி விரட்டுவார். கணவரின் இந்த செயலைப் பார்த்து தான், மனைவிக்கு தன் கணவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதை மனைவி கண்டுபிடிக்கிறாள். இந்த படத்திற்கு இதுதான் முக்கியமான காட்சி என்று என்னிடம் எடுத்து கூறினார்.



Click it and Unblock the Notifications











