அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. ப்ளூ சட்டைக்கு அதிரடி பதிலடி வீடியோ.. வைரல் ஜிப்ஸி ரிவ்யூ!

சென்னை: ஜிப்ஸி படம் குறித்து மோசமாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு மீரான் மகதி அதிரடி பதிலடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் டாக்கீஸ் சேனலுக்காக யூ டியூபில் ப்ளூ சட்டை மாறன் சினிமா விமர்சனம் செய்து வருகிறார். இவர் செய்யும் சினிமா விமர்சனங்கள் எல்லாம் தமிழகம் முழுக்க பெரிய அளவில் பிரபலம்.

Meeran gives reply to Blue Sattai review on Gypsy

சமயங்களில் காமெடியாகவும், விறுவிறுப்பாகவும் இவர் விமர்சனம் செய்வார். அதிலும் சில படங்களை மிக மோசமாக இவர் கலாய்க்கவும் செய்துள்ளார். படம் எடுத்தவர்களின் உழைப்பை கொஞ்சம் கூட மதிக்காமல் மிக மோசமாக படத்தில் நடித்தவர்களை இவர் விமர்சனம் செய்ததும் உண்டு.

இதனால் இவரின் விமர்சனத்திற்கு பலமுறை எதிர்ப்புகள் எழுந்துள்ளது. சில அஜித் மற்றும் விஜய் படங்களை இவர் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். இவரின் சில வார்த்தைகள் ரசிகர்களை சீண்டிய சம்பவங்கள் கூட நடந்துள்ளது.

இந்த நிலையில்தான் இவர் நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ஜிப்ஸி படத்தை விமர்சனம் செய்துள்ளார். இவரின் இந்த விமர்சனம் நிறைய எதிர்பலைகளை சந்தித்துள்ளது. இவரின் விமர்சனத்திற்கு எதிராக மீரான் மகதி தற்போது எதிர்வினையாற்றி இருக்கிறார்.

மீரான் மகதி வெளியிட்டுள்ள வீடியோவில், நீல சட்டை மாறன் ரிவ்யூ என்ற பெயரில் என்ன செய்வார் என்று தெரியும். அவரின் ஜிப்ஸி ரிவ்யூ பார்த்துவிட்டு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால்தான் இந்த வீடியோ போடுகிறேன். இதற்கு முன் இதேபோல் பிகில் படத்திற்கும் வீடியோ வெளியிட்டார். அதற்கு எதிர்வினையாக பலர் வீடியோ வெளியிட்டு இருந்தனர்.

இது ஜீவா படம். விஜய் அளவிற்கு ரசிகர்கள் இல்லை. அதனால் நான் இந்த படத்திற்காக வீடியோ வெளியிடுகிறேன். ஹீரோவிற்கு இந்த படத்தில் அறிவு விரிவாகி பிதுங்கிவிட்டது என்று மாறன் கூறியுள்ளார். அவர் என்ன இந்த படத்தில் கம்யூட்டர் எஞ்சினியாரா? படத்தில் அப்படி என்ன அவர் அறிவு பிதுங்கும் அளவிற்கு செய்துவிட்டார் என்று விளக்குங்கள். அவர் நாடோடி.

அவர் நிறைய மொழி பேசுகிறார். இதை போய் ப்ளூ சட்டை கிண்டல் செய்கிறார். அதேபோல் தமிழ் ஹீரோயின்கள் எல்லாம் லூசுக்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஹீரோவை பிச்சைக்கார நாய் என்றும் பிச்சைக்கார சார் என்றும் கூறியுள்ளார். இதை கேட்கவே மனசு கஷ்டமாக இருக்கிறது. இவர் விஜயை கலாய்க்கிறார், அஜித்தை கலாய்க்கிறார், ஜிப்ஸி போன்ற படங்களையும் கலாய்க்கிறார்.

ஆனால் திரௌபதி போன்ற சாதி படங்களை கலாய்ப்பது இல்லை. இதனால் இவர் ஜாதி பார்த்து தீண்டாமையோடு செயல்படுகிறாரோ என்ற கேள்வி உள்ளது. ஜிப்சி படத்தில் ஒரு பெண் ஓடிப்போய் காதலிப்பதை கூட ஜாதி வன்மத்தோடு இவர் கிண்டல் செய்கிறார். இவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அதேபோல் காசி மத கலவரம் குறித்து ஜிப்ஸி படத்தில் ஒரு காட்சி வரும். அது ஒரு உணர்வூபூர்வமான காட்சி. அதை கூட ப்ளூ சட்டை கிண்டல் செய்கிறார். அவர் ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. அவர் இப்படி காசு வாங்கி ரிவ்யூ செய்வதற்கு வேறு ஏதாவது தொழில் செய்யலாம், அரசியல் செய்யலாம்.

ஹீரோவிற்கு தெள்ளவாரி , பொறம்போக்கு, குதிரையை வச்சு பிச்சை எடுப்பவன் என்று பட்டம் கொடுத்து ரிவ்யூ கூறுகிறார். அது அவர்கள் தொழில், அதை கிண்டல் செய்ய உங்களுக்கு என்ன தகுதி? என்று மீரான் கேள்வி எழுப்பி உள்ளார். ப்ளூ சட்டை செய்த விமர்சனம் இணையம் முழுக்க பெரிய எதிர்ப்புகளை சந்தித்து இருக்கிறது. அதே போல் ப்ளூ சட்டைக்கு எதிரான மீரான் வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது .

More from Filmibeat

Read more about: review gypsy ஜிப்ஸி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X