முகலா பாத் டூ இளநீர் பாயாசம் வரை.. மீசை ராஜேந்திரன் வீட்டு கல்யாண விருந்து.. அசந்து போன நடிகர்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி மற்றும் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் மீசை ராஜேந்திரனின் மகள் சௌபாக்கியவதி நமீதாவுக்கு கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சுமார் ஆயிரம் பேருக்கு சைவமுறைப்படி விதவிதமான தடபுடலாக விருந்து வைக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.
நடிகர் மீசை ராஜேந்திரனை பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நாம் பார்த்து இருக்கிறோம். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அவரின் உடல் அமைப்பு இருக்கும். கேப்டன் விஜயகாந்தின் விஸ்வாசியான இவர் அவரின் புகழை தவறாமல் பேட்டியில் பேசி வருகிறார். இவரின் மகள் திருமணம் 20ந் தேதி நடைபெற்றது. இதில், தமிழக முதவர் ஸ்டாலின், பிரேம லதா விஜயகாந்த், சீமான்,ஜெயகுமார், தமிழிசை சௌந்தர ராஜன், செல்வ பெருந்தகை, ரஜினிகாந்த், ராதா ரவி, நாசர், தியாகு, பிரபு, டி ராஜேந்தர் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

1000 ஆயிரம் பேருக்கு விருந்து: தடபுடலாக நடந்த திருமணம் மற்றும் வரவேற்பில் அனைவரும் வியக்கும் வகையில் சிறப்பான இஸ்கான் கேட்ரிங்கின் விருந்து பறிமாறப்பட்டது. இந்த கேட்ரிங்கின் ஸ்பெஷலே வெங்காயம் , பூண்டு, மசாலா பொடிகள் போடாமல் செய்வது தான். அதற்கு காரணம் வெங்காயம், பூண்டு, போன்றவை கோபம், காமம் போன்றவற்றை அதிகரிக்கக்கூடியவை என்பதால், நாங்கள் மனிதனை சாந்தப்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தி சமைக்கப்படுகிறது. மீசை ராஜேந்திரனின் மகள் திருமணத்தில் சுமார் ஆயிரம் பேருக்கு சமைக்கப்பட்டது.
வகை வகையான விருந்து: இதில், புல்கா, சம்பாத்தி தான் ஆனால், அதில் எண்ணை சேர்க்காமல் நெருப்பில் சுடுவோம், தயில் சாதம், பிஸிபேளா பாத், வெஜ் புலாவ், முகலா பாத், இளநீர் பாயாசம், சில்லி பன்னீர், பன்னீர் பட்டர் மசாலா, கோபி புல்கா, வெஜ் ரைஸ், இட்லி, தோசை, பொடி தோசை, பொடி இட்லி, பொடி தோசை, சாம்பர், புனிதா சட்னி, வெங்காய் சட்னி, தக்காளி சட்னி, அப்பளம், வடை, ஐஸ்கிரீம், ஃப்ரூட் சாலட், இரண்டு வகையாக ஸ்வீட் என இன்னும் பல ஐட்டங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் திருநெல்வேலி ஸ்டைலில் ரிசப்ஷனுக்காக செய்யப்பட்டன. மேலும் திருமணத்திற்கு இட்லி, தோசை, இடியாப்பம், பொடி தோசை, பொடி இட்லி, பொங்கல், பால் பாயாசம், ஸ்வீட் என தடபுடலாக விருந்து போடப்பட்டது.


Click it and Unblock the Notifications