வளர்த்துவிட்ட விஜய்காந்த்.. விஜய்க்கு அந்த மனசு இல்லை.. ஆதங்கப்பட்ட மீசை ராஜேந்திரன்!
சென்னை: சினிமாவில் வளர்த்துவிட்ட விஜய்காந்துக்கு விஜய் பிறந்த நாள் வாழ்த்துக்கூட சொல்லவில்லை என மீசை ராஜேந்திரன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய் சினிமாவில் நன்றாக வருவதற்கு அவரது அப்பா எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு விஜயகாந்த் முக்கியம்.

விஜய் சினிமாவிற்கு வந்த புதிதில், அவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், ஒரு கட்டத்தில் அவர் சினிமாவை விட்டு போய்விடலாம் என நினைத்த போது, விஜயகாந்த் கை கொடுத்து விஜயை தூக்கி நிறுத்தினார். இன்று அவர் டாப் நடிகராக இருக்க அவரும் ஒரு காரணம்.
விஜயகாந்த் பல வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளார். அவரை இன்று வரை விஜய் பார்க்கவில்லை. அதே போல, அண்மையில் விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால், விஜய் வாழ்த்து சொல்லாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

வேதனையாக இருக்கு: இது குறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் எமது பிலிமிபீட் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், விஜயகாந்த் பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்துக்கூட சொல்லாதது எனக்கு மிகப்பெரிய வருத்தமளிக்கிறது. விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு முன்பாக ஆகஸ்ட் 17ந் தேதி திருமாவளவனின் பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். அதன்பிறகு வந்த விஜய்காந்த் பிறந்த நாளுக்கு அவர் வாழ்த்து சொல்லவே இல்லை அதை நினைக்கும் போது வேதனையாகத்தான் இருக்கிறது.
விஜய்யை வாழ வைத்த விஜயகாந்த்: நாளை தீர்ப்பு படம் வெளியான போது அதிக கடன் வந்துவிட்டது. அந்த கடனை அடைக்க நாங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த போது, எங்களுக்கு டேட் கொடுத்து, தமிழ் சினிமாவில் விஜய் என்றால் யார் என்று காட்டியவர் கேப்டன் தான் என்று விஜய்யே ஒரு முறை என்னிடம் சொல்லி இருக்கிறார். அப்படி சொன்னவர் இன்று பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்துக்கூட சொல்லாதது வருத்தத்தை தருகிறது.

விஜய்க்கு மனசு இல்லை: விஜய்காந்த் மகன் சண்முகப்பாண்டியன் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். கேப்டன் அவர்கள் எப்படி விஜய்யை தனது படத்தில் நடிக்க வைத்து அவரை வளர்த்துவிட்டாரோ, அதே போல, இமாலய உயரத்தில் இருக்கும் விஜய், சண்முகப்பாண்டியனை வளர்ந்துவிட வேண்டும். ஆனால், அந்த மனசு விஜய்க்கு இல்லை. பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாதவரா இதை செய்யப்போகிறார் என்று மீசை ராஜேந்திரன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











