விஜய்யே வந்து சொன்னா மீசையை எடுக்கிறேன்.. லியோ ஒரு குப்பை படம்.. மீசை ராஜேந்திரன் பேட்டி!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் ஜெயிலர் வசூலை முறியடித்தால் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என பரபரப்பு கிளப்பிய மீசை ராஜேந்திரன் நேற்று இரவு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது நிலைப்பாட்டை அப்படியே மாற்றி பேசியுள்ளார்.

Meesai Rajendran says Leo is a worst movie and it will not cross Jailer Box Office collection

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளிலேயே ஒட்டுமொத்த இந்திய படங்களின் இந்த ஆண்டு வசூலை முறியடித்து சாதனை படைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால், அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் அதை உலகமகா உருட்டு எனக் கூறி வரும் நிலையில், மீசை ராஜேந்திரனும் அந்த வசூல் அறிவிப்பை நம்பவில்லை எனக் கூறியுள்ளார்.

மீசை எடுக்க மாட்டேன்: மீசை ராஜேந்திரனின் மீசை எடுத்தால் வளர்ந்து விடும். அவரது கையை எடுக்க வேண்டும் என ஒரு பெண்மணி பேட்டியில் பேசுகிறார். அவர் மீது நான் எஃப்.ஐ.ஆர் போட்டால் அவர் தான் கோர்ட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலைய வேண்டும் விஜய் ஒன்றும் வந்து காப்பாற்ற மாட்டார் என சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக கிளம்பிய ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த மீசை ராஜேந்திரன் மீசையை எடுக்க மாட்டேன் என மறுத்துள்ளார்.

எல்சியூ இல்லை ஐசியூ: லியோ எல்சியூ படம் இல்லைங்க சரியான குப்பை படம். அதை பார்த்துட்டு ஐசியூவுக்கு போகிற நிலைக்கு ஆளாகி விட்டேன். கண்டிப்பா ஜெயிலர் படத்தை முறியடிக்காது. படம் ஃபிளாப் தான் என அந்த பேட்டியில் மீண்டும் விஜய் ரசிகர்களை வம்பிழுத்து இருக்கிறார் மீசை ராஜேந்திரன்.

Meesai Rajendran says Leo is a worst movie and it will not cross Jailer Box Office collection

2.0 கலெக்‌ஷனை முந்தட்டும்: ஜெயிலர் வசூலை முந்தினால் தனது மீசையை எடுக்கிறேன் என சவால் விட்ட மீசை ராஜேந்திரன் தற்போது 2.0 படத்தின் 800 கோடி கலெக்‌ஷனை முந்தட்டும் பார்க்கலாம் என ஜகா வாங்கி உள்ளார்.

விஜய்யே வந்து சொல்லட்டும்: மேலும், நடிகர் விஜய்யே வந்து லியோ 800 கோடி வசூலை முந்தி விட்டது ராஜேந்திரன் என சொன்னால், என்னோட மீசையை எடுக்கிறேன் என தோல்வி பயத்தில் மாற்றி மாற்றி பேசி வருவதாக விஜய் ரசிகர்கள் மீசை ராஜேந்திரனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X