Leo - ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள்.. லியோவை விடாத மீசை ராஜேந்திரன்.. என்ன இப்படி சொல்லிட்டாரு?
சென்னை: Leo Collection (லியோ வசூல்) லியோ வசூலில் ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை சொல்கிறார்கள் என்று மீசை ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க லலித்குமார் தயாரித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்ற படமாக லியோ இருந்தது.

சறுக்கல்?: அந்த எதிர்பார்ப்போடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். ஆனால் விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்றவர்களை படம் திருப்திப்படுத்த தவறியது. விமர்சன ரீதியாக சரியாக போகாவிட்டாலும் வசூல் ரீதியாக படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. இதுவரை 540 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
லியோ சக்சஸ் மீட்: சூழல் இப்படி இருக்க லியோ படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விஜய், "ஒரு காட்டுல யானை, புலி, காக்கா, கழுகு, மான் என நிறைய மிருகங்கள் இருந்துச்சு.
காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு. இன்னொருத்தர் ஈட்டியோட போயி யானைக்கு குறி வெச்சு ஒன்னும் இல்லாம வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வெச்சவர்தான் வெற்றியாளர். எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க என்று கூறினார். இதனையடுத்து அவர் ரஜினிக்கு இந்த கதை மூலம் பதிலடி கொடுத்தார் என்று கூறுகின்றனர் அவரது ரசிகர்கள்.
மீசை ராஜேந்திரன் பேட்டி: இந்நிலையில் லியோ திரைப்பம் 1000 கோடி ரூபாயை வசூலித்தால் மீசையை எடுத்துக்கொள்வேன் என்று சவால் விட்ட மீசை ராஜேந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ஜெயிலரைவிட லியோ படத்தின் வசூல் அதிகம் என்று கூறுகிறார்கள். அதாவது 15 கோடி ரூபாய் வசூலில் இருந்து 25 கோடி ரூபாய் அதிகரித்து சொல்கிறார்கள்.
நிறுத்தப்பட்ட படம்: லியோ பட காட்சிகள் பல குறைக்கப்பட்டது. படம் ரிலீஸான நான்காவது நாளில் இருந்தே காத்து வாங்குகிறது. அப்புறம் எப்படி இவ்வளவு வசூலிக்கும். கர்நாடகாவில் லியோ படத்தை வாங்கிய நண்பர் ஒருவர், போட்ட முதலீடு போக 60 லட்சம் ரூபாய்தான் லாபம் என்று கூறுகிறார். அவரது கணக்குப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய் வசூலைக்கூட லியோ தாண்டியிருக்கிறது. ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை சொல்கிறார்கள். முதல் நாள் வசூல் 148 கோடி ரூபாய் என்பதையே தயாரிப்பாளர் பிளான் செய்துதான் சொன்னார்" என்றார்.


Click it and Unblock the Notifications











