லியோ கழுகு சீனே ரஜினியை கலாய்க்கத்தான் விஜய் வச்சிருக்காராம்.. மீசை ராஜேந்திரனின் பலே கற்பனை!
சென்னை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா - கழுகு கதை சொன்னதை வைத்து விஜய்யை தான் காக்கா என ரஜினி சொல்கிறார் என ஏகப்பட்ட பஞ்சாயத்து கிளம்பியது.
அந்த ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே தான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தவறாக சித்தரித்து விட வேண்டாம் என ரஜினிகாந்த் தெளிவாகவே கூறிவிட்டார்.

காக்கா - கழுகு கதைக்கு நடிகர் விஜய் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுப்பார் என சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் இசை வெளியீட்டு விழாவே நடைபெறவில்லை. இந்நிலையில், அதற்கு பதிலாக லியோவில் சீன் வைத்திருக்கிறார் என மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
மீசையை எடுப்பாரா?: மீசை ராஜேந்திரன் எஸ்எஸ் மியூசிக் சேனலுக்கு அளித்த பேட்டியில் தொகுப்பாளர் ஷேவிங் மெஷினுடன் வந்து லியோ படம் ஜெயிலர் வசூலை முந்தப் போகிறது நீங்க எப்போ மீசையை எடுக்கப் போறீங்க என்றே கேட்டு அசிங்கப்படுத்தி விட்டார். ஜெயிலர் வசூலை லியோ முந்த வாய்ப்பே இல்லை என்றும் எல்லாமே பொய்யான பாக்ஸ் ஆபிஸ் என மீண்டும் வம்பிழுத்து வருகிறார் மீசை ராஜேந்திரன்.

லியோவில் கழுகு சீன்: லியோ படத்தின் கிளைமேக்ஸில் கழுகை இவ்ளோ கிட்ட பார்த்ததே இல்லை என்றும் டேய் எப்படி டா இருக்குற என்றும் நடிகர் விஜய் கழுகை பார்த்து பேசுவார். ஆரம்பத்தில் இருந்தே ஹைனா, ஆந்தை என மிருகங்கள் மற்றும் பறவைகளுடன் விஜய் இருக்கும் காட்சிகள் இடம்பெற்ற நிலையில், இரண்டாம் பாதியில் கழுகையும் காட்டியிருப்பார்கள். அதே போல கிளைமேக்ஸிலும் கழுகு சீன் இடம்பெற்றிருக்கும். லியோ படத்தின் இரண்டாம் பாதி கதையே ரஜினி நடித்த கழுகு படத்தில் இடம்பெறும் நரபலி சீன் தான் என்றும் கூறுகின்றனர்.
ரஜினிக்காக வச்ச சீன் அது: இந்நிலையில், மீசை ராஜேந்திரன் மீண்டும் ரஜினி ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் சண்டை போட தூண்டும் விதமாக அந்த கழுகு காட்சியை லியோவில் வைத்ததே ரஜினிகாந்தை சீண்டத்தான் என சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். படம் எப்போவோ ஷூட்டிங் முடிச்சாச்சே என தொகுப்பாளர் கேட்க, மீண்டும் ரீ-ஷூட் செய்து எடுத்திருப்பார்கள் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











