தோத்தாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்கு.. 2வது பார்ட்டில் 3 கெட்டப்.. ஹிப்ஹாப் தமிழா டீசர் செம!
சென்னை: 2017ம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து இயக்கி வெளியான மீசையை முறுக்கு படம் அவருக்கு ஆரம்பமே செம வெற்றிப் படமாக அமைந்தது. அதன் 2ம் பாகத்தை தற்போது இயக்கி 3 கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளார். அதன் அறிவிப்பு டீசர் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குஷ்பு சுந்தர் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்தையும் இயக்கி, இசையமைத்து நடித்துள்ளார். முதல் பாகத்தில் ஆத்மிகா ஜோடியாக நடித்த நிலையில், இந்த படத்தில் சைத்ரா, கெத்திகா ஷர்மா மற்றும் ரம்யா ரங்கநாதன் என 3 ஹீரோயின்கள் ஜோடி போட்டு நடித்துள்ளனர்.

நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மீசையை முறுக்கு 2 திரைப்படம் சம்மருக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி: ஹிப் ஹாப் பாடல்கள் மூலம் டிரெண்டான நிலையில், அடுத்து சினிமாவில் இசையமைப்பாளராக ஆம்பள படத்தில் வேலை செய்தார். இன்று நேற்று நாளை, தனி ஒருவன், கதகளி, கவண், அரண்மனை 2 உள்ளிட்ட படங்களுக்கும் இவர் தான் இசையமைப்பாளர். மீசையை முறுக்கு படம் தந்த அளவுக்கு வெற்றியை அடுத்தடுத்து இவர் நடித்த நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவு, வீரன், பிடி சார், கடைசி உலகப் போர் உள்ளிட்ட படங்கள் தரவில்லை. ஆனால், தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார்.
மீசையை முறுக்கு 2: மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பதற்காக மீசையை முறுக்கு படத்தின் 2ம் பாகத்தை கையில் எடுத்துள்ளார். இந்த முறை பிளாக்பஸ்டர் வெற்றியடைய வேண்டும் என 3 விதமான கெட்டப்புகளில் 1980 காலக்கட்டத்தில் இருந்து கர்நாடக இசைக்கும் கானா இசைக்கும் இடையேயான போட்டியை மையக் கருவாக வைத்து உருவாக்கியுள்ள படத்தின் அறிவிப்பு டீசரை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். சம்மருக்கு விஷாலின் புருஷன் திரைப்படமும் மீசையை முறுக்கு 2 திரைப்படமும் குஷ்பு தயாரிப்பில் வெளியாக காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications