நீண்ட இடைவெளிக்கு பிறகு.. மீண்டும் மீஷா கோஷல்!

சென்னை : நீண்ட இடைவெளிக்கு பிறகு மீஷா கோஷல் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.

நடிகை மீஷா கோஷல் தமிழ் சினிமாவில் அதிகபடியான துணை வேடங்களில் நடித்து வந்தவர். மீஷா குறும்படங்களின் வாயிலாக சினிமாவில் நடிக்க துவங்கியவர். இவர் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போது கூட பல துணிச்சலான கதாபாத்திரங்கள் குறும்படங்களில் கிடைத்த போது நடித்து அசத்தியவர் .

 Meesha Ghoshal is back in the film

மீஷா கடைசியாக மெர்சல் படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்புகள் சினிமாவில் கிடைக்கவில்லை. இதனால் இவர் இரண்டு வருடங்கள் நடிக்காத நிலை ஏற்பட்டிருந்தது.

 Meesha Ghoshal is back in the film

இந்த இரண்டு வருடங்களில் இவர் உடற்பயிற்சி போட்டோசூட் என்றே நேரங்களை செலவிட்டு வந்தார். தனது இயல்பான செயல்களையும் புதிதான விசயங்களையும் தவறாமல் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

நீச்சல் போட்டிகளில் ஆர்வம் உடைய இவர் சென்னையில் நடைபெற்ற ஒரு நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி செலிபிரிட்டி பேட்மிட்டன் லீக் என்று நடைப்பெற்ற சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட பேட்மிட்டன் போட்டிகளிலும் கலந்து கொண்டு தனது சிறந்த திறமையை காண்பித்து அசத்தினார்.

 Meesha Ghoshal is back in the film

மீஷா யாழ் என்ற இலங்கை தமிழ் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் இந்த படம் பல வருடங்களுக்கு முன்பே வெளியாக வேண்டிய படம் ஆனால் பல போராட்டங்களை சந்தித்து 2017ல் வெளியானது. பெரிய பட்ஜெட் படம் இல்லை என்பதனால் இந்த படம் மக்களை சென்று சேரவில்லை ஆனால் பார்த்தவர்கள் வரையில் மீஷாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்று கூறினார்கள் .

 Meesha Ghoshal is back in the film

மீஷா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். ஹரி பாஸ்கர் மற்றும் சஞ்சனா நடித்து வரும் நினைவோ ஒரு பறவை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் மீண்டும் நடித்து வருவதை அடுத்து இவரின் நட்பு வட்டாரங்கள் அனைவரும் இவரை வாழ்த்தி வருகிறார்கள். பல ரசிகர்களும் இணையம் வாயிலாக வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X